» செய்திகள் - விளையாட்டு » உலகம்

சீனாவில் கனமழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு - 15 பேர் உயிரிழப்பு!

புதன் 5, ஜூலை 2023 5:16:54 PM (IST)



தென்மேற்கு சீனாவின் சோங்கிங்கில் பெய்து வரும் கனமழைக்கு 15 பேர் உயிரிழந்துள்ளனர். மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 

சீனாவின் சிச்சுவானில் வெள்ளம் காரணமாக 85 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.  இந்நிலையில் இன்று காலை 7 மணி நிலவரப்படி கனமழையினால் இதுவரை 15 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 4 பேர் காணவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர். கனமழையின் காரணமாக 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

பாதிக்கப்பட்ட இடங்களுக்கு மீட்புக் குழுவினர் விரைந்துள்ளனர். மேலும் கனமழையால் ஒரு சில பகுதிகளில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. பருவகால மழை ஒவ்வொரு ஆண்டும் சீனாவில் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக தெற்கில் பாதிப்பு சற்று அதிகமாகவே காணப்படும். இருப்பினும், கடந்த 50 ஆண்டுகளில் இந்தாண்டு பருவமழை மிக மோசமானதாகக் கருதப்படுவதாகக் கூறப்படுகிறது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory