» செய்திகள் - விளையாட்டு » உலகம்

பிரான்சில் மேயர் வீடு மீது காரை கொண்டு மோதி தீ வைப்பு: மனைவி, குழந்தை காயம்!!

திங்கள் 3, ஜூலை 2023 12:31:44 PM (IST)



பிரான்சில் மேயர் வீடு மீது ஆர்ப்பாட்டக்காரர்கள் காரை கொண்டு மோதி, தீ வைத்ததில் மனைவி, குழந்தை காயம் அடைந்தனர்.

பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகருக்கு உட்பட்ட நான்டர் புறநகரில் நீல் (வயது 17) என்ற வட ஆப்பிரிக்க சிறுவன், கடந்த 5 நாட்களுக்கு முன் போக்குவரத்து நிறுத்தம் பகுதியில் நிற்காமல் விதிமீறி சென்று விட்டான் என கூறி போலீசார் துப்பாக்கியால் சுட்டனர். இந்த சம்பவத்தில் காயமடைந்த அந்த சிறுவன் உயிரிழந்து விட்டான். இதுபற்றி தெரிந்ததும், மக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது. 

இதனால், அரசுக்கு எதிராக பாரீஸ் உள்பட எண்ணற்ற புறநகர் பகுதிகளில் மக்கள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சிறுவன் சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு திரைபிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகள் சிலரும் வருத்தமும், கண்டனமும் தெரிவித்தனர். போராட்டம் வன்முறையாக மாறியதில், பள்ளிகள் மற்றும் காவல் நிலையங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டும், தாக்கப்பட்டும் உள்ளன என அந்நாட்டு உள்துறை மந்திரி ஜெரால்டு டார்மனின் அவரது டுவிட்டர் செய்தியில் வெளியிட்டார்.

Also Read - கம்போடியாவில் கேளிக்கை விடுதி தீப்பிடித்து 6 பேர் பலி
பாரீசில் வன்முறை பரவியதில், 40-க்கும் மேற்பட்ட கார்கள் தீக்கிரையாகி உள்ளன. 170 காவல் துறை அதிகாரிகள் காயம் அடைந்து உள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்ட 180-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு உள்ளனர். வன்முறை பரவாமல் கட்டுப்படுத்தும் நோக்கில் 45 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

இந்நிலையில், தலைநகர் பாரீசில் உள்ள நகரம் ஒன்றின் மேயரான வின்சென்ட் ஜீன்பிரன் என்பவர் அவரது டுவிட்டரில் வெளியிட்டு உள்ள செய்தியில், அவரது வீடு மீது ஆர்ப்பாட்டக்காரர்கள் கும்பலாக சென்று தாக்குதல் நடத்தி உள்ளனர்.

அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் தீங்கு ஏற்படுத்தும் நோக்கில் தாக்குதல் நடந்து உள்ளது. அவருடய வீடு மீது அந்த கும்பல் கார் ஒன்றை கொண்டு மோத செய்து உள்ளது. அதன்பின்னரும் ஆத்திரம் தீராமல், வீட்டில் அவரது குடும்பத்தினர் தூங்கி கொண்டிருந்தபோது தீ வைத்து கொளுத்தி உள்ளது என அவர் தெரிவித்து உள்ளார். இந்த சம்பவத்தில், அவரது மனைவி மற்றும் குழந்தைகளில் ஒன்று காயமடைந்து உள்ளனர். இது பேசி விவரிக்க முடியாத ஒரு கோழைத்தன கொலை முயற்சி என்று அவர் தெரிவித்து உள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory