» செய்திகள் - விளையாட்டு » உலகம்

மேக் இன் இந்தியா திட்டத்தால் பொருளாதார வளர்ச்சி: பிரதமர் மோடிக்கு புதின் பாராட்டு

சனி 1, ஜூலை 2023 5:37:10 PM (IST)



மேக் இன் இந்தியா திட்டம் இந்திய பொருளாதாரத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார்.

மாஸ்கோவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அதிபர் புதின் கூறியுள்ளதாவது: பிரதமர் மோடி கடந்த 2014-ல் தொடங்கி வைத்த "மேக் இன் இந்தியா" திட்டம் உள்ளூர் உற்பத்தி, மேம்பாடு, தயாரிப்புகளின் ஒருங்கிணைப்பை ஊக்குவித்துள்ளது. இதற்காக, இந்தியாவில் உள்ள எனது பெரிய நண்பர் மோடியை பாராட்டியே ஆக வேண்டும். அவர் முன்னோக்கு பார்வையால் தொடங்கிய இந்த திட்டம் இந்தியப் பொருளாதாரத்தில் உண்மையிலேயே ஈர்க்கக்கூடிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 

நல்ல திட்டங்களை சிறப்பாக செயல்படுத்துவது யாராக இருந்தாலும் அதனை பின்பற்றுவதால் எந்த தீங்கும் ஏற்பட்டு விடாது. இந்தியாவை மதிப்புமிக்க முன்மாதிரியாக அங்கீகரித்து, மற்ற நாடுகளும் இதேபோன்ற உத்திகளை செயல்படுத்துவதை பரிசீலிக்க வேண்டும். மேற்கத்திய நாடுகளின் பொருளாதார தடைகளுக்கு இடையில் ரஷ்ய நிறுவனங்கள் புதிய வாய்ப்புகளை கவனத்துடன் தேர்வு செய்ய வேண்டும். இதன் மூலம் உள்ளூர் சந்தைக்கு மிகப்பெரிய ஆதரவை வழங்க முடியும். இவ்வாறு புதின் தெரிவித்தார்.

ஆட்டோ மொபைல், மருந்து, ஜவுளி, எலக்ட்ரானிக்ஸ் என 25 துறைகளில் "மேக் இன் இந்தியா" திட்டம் பிரதமர் மோடியால் 2014-ல் தொடங்கி வைக்கப்பட்டது. இந்தியா பொருளாதாரத்தை உலகளாவிய உற்பத்தி சக்தியாக இந்த திட்டம் மாற்றியது. இந்தியா 3.7 டிரில்லியன் டாலர் மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் உலக பொருளாதாரத்தில் 5-வது இடம் வகிப்பது குறிப்பிடத்தக்கது.

உலகளாவிய நிறுவனங்களின் உற்பத்தி மையங்களை ஈர்ப்பதிலும், அன்னிய முதலீட்டை அதிகளவில் கவருவதிலும் இந்தியாவின் பரந்த நுகர்வோர் சந்தை முக்கிய பங்காற்றுகிறது. பிரதமரிடம் பேச்சு: இதனிடையே, உக்ரைன் போர் நிலைமை, ரஷ்யாவில் அண்மையில் ஏற்பட்ட வாக்னர் ஆயுதக் குழுவினரின் கிளர்ச்சி நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் புதின் விவாதித்துள்ளார்.


மக்கள் கருத்து

ரெண்டுJul 1, 2023 - 08:27:15 PM | Posted IP 162.1*****

பேரும் அவங்க அவங்க கேமராக்கு போஸ் கொடுக்குறாங்க.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory