» செய்திகள் - விளையாட்டு » உலகம்

பிரதமர் மோடி அழைப்பு : ஷாங்காய் மாநாட்டில் பாகிஸ்தான் பிரதமர் பங்கேற்கிறார்!

சனி 1, ஜூலை 2023 12:24:22 PM (IST)



ஷாங்காய் ஒத்துழைப்பு மாநராட்டில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷரீப் பங்கேற்பார் என அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.

சீனாவின் ஷாங்காயில் நடந்த மாநாட்டில் உருவாக்கப்பட்ட ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் தற்போதைய தலைவராக இந்திய பிரதமர் நரேந்திர மோடி உள்ளார். இந்நிலையில் இந்த அமைப்பின் 23-வது மாநாடு வருகிற 4-ந் தேதி காணொலி வாயிலாக நடைபெறுகிறது.

இந்த கூட்டத்தில் பிரதமர் மோடியின் அழைப்பின் பேரில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷரீப் பங்கேற்பார் என அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்புக்கு பாகிஸ்தான் அளிக்கும் முக்கியத்துவத்தை வெளிக்காட்டும் வகையில் பிரதமர் ஷெபாஸ் ஷரீப்பின் பங்கேற்பு இருக்கும் என அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல் பிரதமர் மோடியின் அழைப்பின் பேரில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் சீன அதிபர் ஜின்பிங் பங்கேற்பார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டு வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஹுவா சுன்யிங் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநாட்டில் சீன அதிபர் ஜின்பிங் முக்கிய கருத்துகளை தெரிவிப்பார் என அதில் கூறப்பட்டுள்ளது.

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் சீன அதிபர் பங்கேற்பு குறித்து தற்போதுதான் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா தலைமையில் முதல் முறையாக இந்த மாநாடு நடைபெறும் நிலையில், சீனா பீஜிங்கில் உள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு தலைமைச்செயலகத்தில், நவீனமாக அமைக்கப்பட்ட 'புதுடெல்லி அரங்கு' சமீபத்தில் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory