» செய்திகள் - விளையாட்டு » உலகம்
அமெரிக்க வராலற்றில் இருண்ட காலம்: எப்.பி.ஐ. சோதனைக்கு டிரம்ப் கடும் கண்டனம்!
செவ்வாய் 9, ஆகஸ்ட் 2022 11:36:47 AM (IST)
அமெரிக்கா முன்னாள் அதிபர் டிரம்ப்பின் சொகுசு பங்களாவில் எப்.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதற்கு டிரம்ப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் கூறும்போது, "எனது மர்-எ-லாகோ எஸ்டேட்டில் உள்ள பங்களாவில் எப்.பி.ஐ. சோதனை நடத்தி வருகின்றனர். முன் அறிவிப்பின்றி சோதனை நடத்தும் அரசு அமைப்புகளுடன் இணைந்து அவர்களுக்கு ஒத்துழைப்பு அளித்து வருகிறேன். இச்சோதனை அவசியமோ அல்லது பொருத்தமானதோ அல்ல. அதிகாரிகள் என் பெட்டகத்தை உடைத்தார்கள். இது நமது தேசத்துக்கு இருண்ட காலங்கள்.
அமெரிக்க அதிபராக இருந்த ஒருவருக்கு இதற்கு முன்பு இது போன்று எதுவும் நடந்ததில்லை. மூன்றாம் தர உலக நாடுகளில் மட்டுமே இத்தகைய தாக்குதல் நடத்த முடியும். துரதிருஷ்டவசமாக தற்போது அந்த நாடுகளில் ஒன்றாக அமெரிக்கா மாறியுள்ளது. இதற்கு முன்பு கண்டிராத அளவில் ஊழல் நிறைந்துள்ளது. இது மிக உயர்மட்ட அரசியல் இலக்கு நடவடிக்கை ஆகும்.
2024-ம் ஆண்டு அதிபர் தேர்தலில் நான் போட்டியிடுவதை அவர்கள் தீவிரமாக விரும்பவில்லை. அமெரிக்க மக்களுக்காக தொடர்ந்து போராடுவேன் என்றார். கடந்த அதிபர் தேர்தலில் தோற்ற டிரம்ப், வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறியபோது சில ரகசிய ஆவணங்கள் அடங்கிய பெட்டிகளை புளோரிடாவில் உள்ள சொகுசு பங்களாவுக்கு எடுத்து சென்று விட்டார் என்ற குற்றச்சாட்டுகள் குறித்து அமெரிக்க நீதித்துறை விசாரித்து வருகிறது. இது தொடர்பாக டிரம்ப்பின் சொகுசு பங்களாவில் சோதனை நடந்ததாக கூறப்படுகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பல ஆயிரம் கோடி வங்கி கடன் மோசடி: நீரவ் மோடியின் சகோதரர் அமெரிக்காவில் கைது!
சனி 5, ஜூலை 2025 4:36:42 PM (IST)

இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு 500% வரி: அமெரிக்க நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல்!
வெள்ளி 4, ஜூலை 2025 11:55:30 AM (IST)

ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு 500% வரி: அமெரிக்கா முடிவுக்கு ஜெய்சங்கர் கருத்து!
வியாழன் 3, ஜூலை 2025 5:48:03 PM (IST)

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 6 மாத சிறை தண்டனை விதிப்பு!
புதன் 2, ஜூலை 2025 5:14:15 PM (IST)

பகல்காம் தாக்குதல் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: குவாட் அமைப்பு கூட்டறிக்கை
புதன் 2, ஜூலை 2025 10:56:21 AM (IST)

ராணுவ தளபதியை விமர்சித்த தாய்லாந்து பிரதமர் சஸ்பெண்ட்: அரசியலமைப்பு நீதிமன்றம் அதிரடி
புதன் 2, ஜூலை 2025 8:33:27 AM (IST)
