» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இஸ்ரேல் ராணுவம் தாக்குதலில் சிறுமி உட்பட 10பேர் பலி: பாலஸ்தீனத்தில் பதற்றம்!

சனி 6, ஆகஸ்ட் 2022 3:53:27 PM (IST)



பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் சிறுமி உட்பட 10 பேர் கொல்லப்பட்டனர். இதனால் அங்கு பதற்றமானச் சூழல் நிலவுகிறது.

பாலஸ்தீனத்தின் அல்-குத்ஸ் படைப்பிரிவின் தளபதியான தைசிர் அல்-ஜபரி, காசாவின் மையப் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்தார். இந்நிலையில், அவரை குறி வைத்து இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் தைசிர் அல் - ஜபரி உட்பட 10 பேர் கொல்லப்பட்டனர். 55 பேர் காயமடைந்தனர். அலா குதும் என்ற சிறுமியும், அவளது தந்தையும் அருகில் கடைக்கு சென்றுக் கொண்டிருக்கும்போது இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டனர்.

அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளது, அந்நாட்டில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மார்ச் மாதம் ஜெருசலேமில் அல் அக்ஸா மசூதியில் பாலஸ்தீனர்களுக்கும், இஸ்ரேல் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் இஸ்ரேல் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலர் காயமடைய சிறுவன் ஒருவன் உயிரிழந்தான். இதனைத் தொடர்ந்து இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே மோதல் உருவாகியது. அமெரிக்கா, ஐக்கிய நாடுகள் இவ்விவகாரத்தில் தலையிட்டு இரு நாடுகளும் அமைதி காக்க வேண்டும் என வலியுறுத்தின. இந்த நிலையில், பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory