» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இலங்கையைப் போன்று பாகிஸ்தான் அரசும் திவால் ஆகும் : நிதியமைச்சர் எச்சரிக்கை

செவ்வாய் 14, ஜூன் 2022 5:23:44 PM (IST)

பெட்ரோலிய பொருட்களின் விலையை உயர்த்தவில்லை என்றால் இலங்கையை போன்ற நிலைக்கு பாகிஸ்தான் தள்ளப்படும் என நிதி அமைச்சர் கூறினார்.

பாகிஸ்தான் நிதி அமைச்சர் முஃப்தாஸ் இஸ்மாயில் அந்நாட்டி செய்தி நிறுவனத்திற்கு நேற்று பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், பெட்ரோலிய பொருள்ட்களுக்கு வழங்கப்படும் மானியத்தை ரத்து செய்யும்படி சர்வதேச நாணய நிதியம் வலியுறுத்தி வருகிறது. பெட்ரோல் லிட்டருக்கு 19 ரூபாயும், டீசல் லிட்டருக்கு 53 ரூபாயும் அரசு மானியம் வழங்குகிறது. இலங்கையும் இதேபோல் தான் பொதுமக்களுக்கு மானியம் வழங்கியது. தற்போது இலங்கை திவாலாகிவிட்டது.

பெட்ரோல், மின்சார விலையை உயர்த்தவில்லை என்றால் நாடு திவால் நிலைக்கு தள்ளப்படும். பெட்ரோலிய பொருட்கள் மீதான மானியத்தை ரத்து செய்து விலையை உயர்த்தவில்லையென்றால் சர்வதேச நாணய நிதியம் பாகிஸ்தானுக்கு நிதி உதவிகளை வழங்காது. இவ்வாறு நடைபெறும் பட்சத்தில் நாடு அழிவை நோக்கி செல்லும். கடுமையான முடிவுகளை எடுங்கள் என்று பிரதமரிடம் நான் கூறினேன்.

ஆனால், பெட்ரோலிய பொருட்களின் விலையை உயர்த்துவதை பிரதமர் விரும்பவில்லை. இலங்கை இன்று அதிக விலைக்கு எரிபொருளை வாங்குகிறது. மக்களுக்கு மருந்துப்பொருட்கள் வாங்கவும் அந்நாட்டில் பணம் இல்லை. பெட்ரோலிய பொருட்களின் விலையை உயர்த்தவில்லையென்றால் இலங்கையை போன்ற நிலைக்கு பாகிஸ்தான் தள்ளப்படும்' என்று அவர் கூறினார்.


மக்கள் கருத்து

தமிழன்Jun 14, 2022 - 08:49:47 PM | Posted IP 162.1*****

ஒன்னு இனவெறி , இன்னொன்று மதவெறி இரண்டு நாடுகளும் உருப்படாது

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory