» செய்திகள் - விளையாட்டு » உலகம்
பிரபல நடிகர் ஜானி டெப் அவதூறு வழக்கு: நடிகை ரூ.116 கோடி இழப்பீடு தர நீதிமன்றம் உத்தரவு!
வியாழன் 2, ஜூன் 2022 11:35:40 AM (IST)
பிரபல ஹாலிவுட் நடிகர் ஜானி டெப் தொடர்ந்த அவதூறு வழக்கில் ரூ.116 கோடி இழப்பீடு தர நடிகைக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதன்பின் 2018-ம் ஆண்டு 'வாஷிங்டன் போஸ்ட்' பத்திரிகையில் ஆம்பர் ஹேர்ட் ஒரு கட்டுரை எழுதினார். அதில் பெண்கள் சந்திக்கும் பாலியல் துன்புறுத்தல் பற்றி எழுதியிருந்த அவர், ஜானி டெப்பின் பெயரை குறிப்பிடாமல், தன்னை அவர் துன்புறுத்தியதாக எழுதி இருந்தார். இது ஹாலிவுட் உலகை அதிரவைத்தது. இந்த கட்டுரை வெளியானதில் இருந்து ஜானி டெப் பட வாய்ப்புகளை இழந்தார்.
இந்நிலையில் ஆம்பெர் ஹெர்ட் தன்னை அவதூறு செய்துவிட்டதால கடந்த 2018ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ஆம்பர் ஹெர்ட் தனக்கு ரூ.380 கோடி நஷ்ட ஈடு தர வேண்டும் என கேட்டிருந்தார். இந்த வழக்கு சில வருடங்களாக நடந்து வந்த நிலையில், சில மாதங்களாக இறுதி கட்ட விசாரணை நடைபெற்று வந்தது. இதில் ஆம்பெர் ஹெர்ட் கூறியது அனைத்தும் பொய் என ஆதாரங்கள் மூலம் நிரூபனமானது.
இதையடுத்து இந்த வழக்கில் தற்போது ஜானி டெப்புக்கு ஆதர்வாத தீர்ப்பு வந்துள்ளது. இதில் ஜானி டெப்புக்கு, ஆம்பர் ஹெர்ட் ரூபாய் 116 கோடி இழப்பீடு செலுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. இதுகுறித்து பதிவிட்ட ஜானி டெப், நீதிமன்றம் தான் இழந்த வாழ்க்கையை மீட்டு கொடுத்துள்ளது. எனது வாழ்வின் புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது என கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஐக்கிய அரபு அமீரகத்தில் கொட்டி தீர்க்கும் கனமழை: அனைகள் வேகமாக நிரம்புகிறது!
வெள்ளி 12, ஆகஸ்ட் 2022 5:24:22 PM (IST)

தாய்லாந்தில் தஞ்சமடைந்தார் கோத்தபய ராஜபக்சே!!
வெள்ளி 12, ஆகஸ்ட் 2022 12:11:43 PM (IST)

குரங்கு அம்மை நோய் பீதி: பிரேசிலில் விஷம் வைத்து கொல்லப்படும் குரங்குகள்..!!
வியாழன் 11, ஆகஸ்ட் 2022 11:05:39 AM (IST)

இலங்கை துறைமுகத்துக்கு நுழைந்த சீன உளவு கப்பல்: இந்தியாவை மிரட்டும் சீனா..!
வியாழன் 11, ஆகஸ்ட் 2022 11:01:02 AM (IST)

சிங்கப்பூரில் இருந்து வெளியேறும் கோத்தபய ராஜபக்சே: தாய்லாந்தில் தஞ்சமடைய திட்டம்!
புதன் 10, ஆகஸ்ட் 2022 3:41:53 PM (IST)

அமெரிக்க வராலற்றில் இருண்ட காலம்: எப்.பி.ஐ. சோதனைக்கு டிரம்ப் கடும் கண்டனம்!
செவ்வாய் 9, ஆகஸ்ட் 2022 11:36:47 AM (IST)
