» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இலங்கை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள வேண்டி போப் பிரான்சிஸ் பிரார்த்தனை

செவ்வாய் 26, ஏப்ரல் 2022 11:29:19 AM (IST)

இலங்கை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள வேண்டி பிரார்த்திப்பதாக போப் பிரான்சிஸ் தெரிவித்தார். 

கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் தேதி இலங்கையில் ஈஸ்டர் ஞாயிறு பிரார்த்தனையின் போது நடத்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்புத் தாக்குதலில் 270 பேர் கொல்லப்பட்டனர். 45 வெளிநாட்டினர் உள்பட 500 பேர் காயமடைந்தனர். 3 தேவாலயங்கள், 3 நட்சத்திர விடுதிகள் தாக்குதலில் பலத்த சேதமடைந்தன.

கொழும்பின் கர்தினால் மால்கம் ரஞ்சித் தலைமையில், 2019 பயங்கரவாத குண்டுவெடிப்புத் தாக்குதலில் பலியான மற்றும் உயிர் பிழைத்தவர்களின் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் உள்பட இத்தாலியில் பணிபுரியும் சுமார் 3,500 இலங்கை கத்தோலிக்கர்கள் பங்கேற்ற கூட்டத்தில் போப் பிரான்சிஸ் உரையாற்றுகையில், குண்டு வெடிப்புச் சம்பவத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கலை தெரிவித்துக் கொண்டார்.

மேலுமட், தாக்குதலின் பின்னணியிலிருக்கும் உண்மையை வெளிக்கொணர வேண்டும் என்று  போப் பிரான்சிஸ் வலியுறுத்தியுள்ளார். அதேவேளையில், இலங்கை தற்போது சந்தித்து வரும் கடுமையான பொருளாதார நெருக்கடியையும், அதன் வரலாற்றுக்கால அனுபவங்களைக் கொண்டு மீண்டு வர வேண்டிய பிரார்த்திப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.


மக்கள் கருத்து

INDIANApr 28, 2022 - 03:19:25 PM | Posted IP 162.1*****

First you pray or help for some African country's as the people (converted by christian) are suffering starvation.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory