» செய்திகள் - விளையாட்டு » உலகம்
கரோனாவுக்கு இந்த ஆண்டே முடிவு கட்டலாம்: உலக சுகாதார அமைப்பு தலைவர் நம்பிக்கை!
செவ்வாய் 25, ஜனவரி 2022 11:04:25 AM (IST)
உலக நாடுகள் விரிவான நடவடிக்கை எடுத்தால் கரோனாவுக்கு இந்த ஆண்டே முடிவு கட்டலாம் என்று உலக சுகாதார அமைப்பு தலைவர் கூறியுள்ளார்.

இந்தியாவில் ஒமைக்ரான் தொற்று, சமூக பரவலாக மாறிவிட்டதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரித்து வருவதால், ஏப்ரல் மாதத்துக்குள் கரோனாவுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விடும் என்று மருத்துவ நிபுணர்கள் கணித்துள்ளனர். இதுபோல், உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குனர் டெட்ராஸ் அதனம் கெப்ரிசியசும் இந்த ஆண்டுடன் கரோனா முடிவுக்கு வந்து விடும் என்று கூறியுள்ளார்.
உலக சுகாதார அமைப்பின் செயற்குழுவின் 150-வது அமர்வு நேற்று நடைபெற்றது. அதில், டெட்ராஸ் அதனம் கெப்ரிசியஸ் பேசியதாவது: கரோனாவை ஒழித்து கட்டுவதில் பிராந்திய, தேசிய, சர்வதேச ரீதியாக உலக சுகாதார அமைப்பு தொடர்ந்து பணியாற்றி வருகிறது. நாடுகளுக்கு தேவையான ஆதாரங்கள், வியூகங்கள் மற்றும் தொழில்நுட்ப உதவி அளித்து வருகிறது.
நாடுகள் இந்த வியூகங்களை பயன்படுத்தி, விரிவான நடவடிக்கை எடுத்தால், நாம் இந்த ஆண்டிலேயே கரோனாவுக்கு முடிவு கட்டலாம்.கரோனாவில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு, இதுபோன்ற நெருக்கடிகளை தடுக்க புதிய தீர்வுகளை உருவாக்க வேண்டும். தொற்று முடியும்வரை காத்திருக்கக்கூடாது. இவ்வாறு அவர் பேசினார்.
மக்கள் கருத்து
adaminJan 25, 2022 - 02:14:00 PM | Posted IP 162.1*****
medicine companies irukra vara athu mudiyathuda sonna payale
மேலும் தொடரும் செய்திகள்

இலங்கையில் முள்ளிவாய்க்கால் 13-ஆவது நினைவு தினம்: முதல் முறையாக சிங்களா்கள் அஞ்சலி!
வியாழன் 19, மே 2022 11:03:03 AM (IST)

சீனாவில் 133 பேரின் சாவுக்கு விமானியே காரணம்: கருப்பு பெட்டி மூலம் கிடைத்த பகீர் தகவல்..!!
புதன் 18, மே 2022 4:49:04 PM (IST)

சினிமா உலகத்திற்கு புதிய சார்லி சாப்ளின் தேவை: கேன்ஸ் திரைப்பட விழாவில் உக்ரைன் அதிபர் பேச்சு
புதன் 18, மே 2022 4:22:32 PM (IST)

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபட்ச மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி!
செவ்வாய் 17, மே 2022 5:46:50 PM (IST)

பிரான்ஸ் புதிய பிரதமராக எலிசபெத் போர்னி நியமனம் : அதிபர் இம்மானுவேல் மேக்ரான் உத்தரவு
செவ்வாய் 17, மே 2022 4:55:18 PM (IST)

கோதுமை ஏற்றுமதிக்கு தடை.. இந்தியாவுக்கு சீனா ஆதரவு - ஜி7 நாடுகள் மீது விமர்சனம்!
திங்கள் 16, மே 2022 5:47:02 PM (IST)

B@L@Jan 25, 2022 - 03:36:07 PM | Posted IP 162.1*****