» செய்திகள் - விளையாட்டு » உலகம்

எஸ் 400 விவகாரம்: இந்தியா மீது பொருளாதாரத் தடை விதிக்க அமெரிக்கா முடிவு?

புதன் 24, நவம்பர் 2021 11:17:20 AM (IST)இந்தியாவுக்கு பொருளாதார தடை விதிப்பதில் இருந்து விலக்கு அளிப்பது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

ரஷ்யாவிடம் இருந்து 5 எஸ்400 ரக ஏவுகணை தடுப்பு அமைப்பை வாங்க இந்தியா ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. 5.5 பில்லியன் டாலர் மதிப்பில் 2019-ல் இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டது. எஸ்400 ரக ஏவுகணை தடுப்பு அமைப்பு தரையிலிருந்து வானில் வரும் இலக்குகளை 400 கிலோ மீட்டர் தொலைவிலேயே மிக துல்லியமாக தாக்கி அழிக்கும் திறன் கொண்டது. 

இதற்கிடையில், எஸ்400 ரக ஏவுகணை தடுப்பு அமைப்பு இந்தியாவுக்கு விநியோகிக்கும் பணியை ரஷியா தொடங்கியுள்ளது. திட்டமிட்டபடி இந்தியாவுக்கு எஸ்400 ரக ஏவுகணை தடுப்பு அமைப்பு விநியோகம் தொடங்கி நடைபெற்று வருவதாக ரஷிய அதிகாரி கடந்த 14-ம் தேதி கூறினார். அதேவேளை, ரஷியாவிடம் இருந்து இந்தியா எஸ்400 ரக ஏவுகணை தடுப்பு அமைப்பு வாங்க தொடக்கம் முதலே அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்து வந்தது. 

மேலும், இந்த விவகாரத்தில் இந்தியா மீது பொருளாதாரத்தடை விதிக்கப்படும் எனவும் அமெரிக்கா எச்சரிக்கை விடுத்திருந்தது. ஆனால், அமெரிக்காவின் எச்சரிக்கையும் மீறி ரஷியாவிடம் இருந்து இந்தியா ஏவுகணை தடுப்பு அமைப்பை வாங்கியுள்ளது. இதனால், இந்தியா மீது அமெரிக்கா பொருளாதாரத்தடை விதிக்கலாம் என தகவல் வெளியானது. மேலும், நட்பு நாடு என்பதால் இந்தியா மீது அமெரிக்கா பொருளாதாரத்தடை விதிப்பதில் இருந்து விலக்கு அளிக்கவும் வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகின.

இந்நிலையில், எஸ்400 விவகாரத்தில் பொருளாதார தடை விதிப்பதில் இருந்து இந்தியாவுக்கு விலக்கு அளிப்பது குறித்து முடிவெடுக்கவில்லை என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.  இந்தியா மீது பொருளாதாரத்தடை விதிக்கும் பட்சத்தில் அது இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் மிகப்பெரிய விரிசலை ஏற்படுத்தலாம் என்பதால் பெரும்பாலும் இந்தியா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதிக்க வாய்ப்பில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThoothukudi Business Directory