» செய்திகள் - விளையாட்டு » உலகம்

மனைவி, குழந்தைகளை கொன்ற இந்தியருக்கு ஆயுள் சிறை: அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு

வெள்ளி 12, நவம்பர் 2021 5:33:26 PM (IST)



மனைவி, குழந்தைகளை கொன்ற இந்திய இன்ஜினியருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.

அமெரிக்காவில் தகவல் தொழில் நுட்பத்துறை வல்லுனராக இருந்து வந்தவர், சங்கர் நாகப்பா ஹங்குட் (55). இந்திய வம்சாவளியான இவர் கலிபோர்னியாவில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார்.2019-ம் ஆண்டு, இவர் தனது மனைவி மற்றும் 3 குழந்தைகளை படுகொலை செய்து விட்டார். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் சங்கர் நாகப்பா ஹங்குட் கைது செய்யப்பட்டு வழக்கு விசாரணை அங்குள்ள நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

விசாரணையின்போது, அவர் தனது மனைவி ஜோதி (46) மற்றும் குழந்தைகள் வருண் (20), கவுரி (16), நிஸ்சால் (13) ஆகியோரை படுகொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.  அவர்களுக்கு தேவையான பணத்தை வழங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டதால்தான், இந்த கொலைகளை தான் செய்ததாக நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார். இதையடுத்து பிளேசர் கவுண்டி நீதிமன்றம் அவருக்கு பரோல் இல்லாத ஆயுள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்பு குறித்து அவர் கருத்து கூற மறுத்து விட்டார்.


மக்கள் கருத்து

இந்தியன்Nov 14, 2021 - 07:48:22 AM | Posted IP 173.2*****

பணவெறி முட்டாள்

adaminNov 13, 2021 - 12:46:56 AM | Posted IP 162.1*****

55 vayasula kodukka mudilaya.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory