» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ரஷியாவிடம் ஏவுகணைகளை வாங்கும் இந்தியா மீது பொருளாதார தடை கூடாது: அமெரிக்க எம்பிக்கள்

வியாழன் 28, அக்டோபர் 2021 5:04:50 PM (IST)

ரஷியாவிடம் எஸ் 400 ரக ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகளை கொள்முதல் செய்யும் இந்தியா மீது பொருளாதார தடை விதிக்கக் கூடாது என்று அமெரிக்காவின் முக்கிய எம்பிக்கள் சிலர் குரல் எழுப்பி உள்ளனர்.

இது தொடர்பாக அதிபர் அவர்கள் கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். அதில் ரஷியாவிடம் இருந்து எஸ் 400 ரக ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகளை வாங்க கடந்த 2018ம் ஆண்டே இந்தியா ஒப்பந்தம் செய்து கொண்டதை சுட்டிக் காட்டியுள்ளனர். இதற்கான தொகையை 2025ம் ஆண்டு தான் ரஷியாவிற்கு இந்தியா கொடுத்து முடிக்கும் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அதிபர் தேர்தலில் ரஷியா தலையிட்டு குழப்பத்தை விளைவித்ததாக அமெரிக்கா குற்றம் சாட்டி வருகிறது. எனவே ரஷியா மீதும் அந்நாட்டுடன் ஒப்பந்தங்கள் செய்யும் நாடுகள் மீதும் 2017ம் ஆண்டு இயற்றப்பட்ட அமெரிக்க எதிரிகள் மீதான பொருளாதார சட்டம் மூலம் அமெரிக்கா நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில் ஆயுதங்கள் வாங்கும் இந்தியா மீது பொருளாதார தடை விதிக்கப்படும் என்பதால் அது கூடாது என்று அமெரிக்க எம்பிக்கள் சிலர் அதிபருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

இந்த சட்டத்தில் இருந்து இந்தியாவுக்கு விலக்கு அளித்தால் அது அமெரிக்க தேசிய நலனுக்கு உகந்ததாக இருக்கும் என்றும் அந்நாட்டு எம்பிக்கள் கூறியுள்ளனர். கடந்த ஆண்டு 3.4 பில்லியன் டாலர் அளவிற்கு ஆயுதங்கள் வாங்க அமெரிக்காவுடன் இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளதையும் எம்பிக்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.


மக்கள் கருத்து

truthOct 29, 2021 - 04:34:34 AM | Posted IP 162.1*****

namma ooru arivaaligal enna seikirargal. innum aduthavargalin thayavil than irrukka vaendiyathu nallathilai

adaminOct 28, 2021 - 08:31:51 PM | Posted IP 173.2*****

வாங்குற ஆயுதங்கள் எல்லாம் வெச்சு என்ன பண்ணிட்டு இருக்கோம்.? போரை எதிர்நோக்கி காத்திருக்கோம்?

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory