» செய்திகள் - விளையாட்டு » உலகம்
அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டன் மருத்துவமனையில் அனுமதி
வெள்ளி 15, அக்டோபர் 2021 11:28:24 AM (IST)
அமெரிக்க முன்னாள் அதிபர் பில் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டனுக்கு திடீரென்று உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் கலிபோர்னியாவில் உள்ள இர்வின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 75 வயதான அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து டாக்டர்கள் கண்காணித்து வருகிறார்கள். அவருக்கு ஏற்பட்ட பாதிப்பு முந்தைய இதய பிரச்சினை அல்லது கொரோனாவுடன் தொடர்புடையதல்ல என்றும் ரத்த தொற்று பாதிப்பு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இதுகுறித்து அவரது செய்தித் தொடர்பாளர் ஏஞ்சல் யூரேனா டுவிட்டர் பதிவல் "பில் கிளிண்டன் நல்ல மனநிலையில் இருக்கிறார். அவருக்கு சிறந்த கவனிப்பை வழங்கிய டாக்டர்கள், நர்சுகள் மற்றும் ஊழியர்களுக்கு நன்றி" என்று கூறி உள்ளார். டாக்டர்கள் அல்பேஷ் அமின், லிசா பார்டாக் கூறும்போது, "பில்கிளிண்டனுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை நல்ல பலனை அளித்துள்ளது. அவர் விரைவில் வீட்டுக்கு செல்வார் என்று நாங்கள் நம்புகிறோம்" என்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நியூயார்க் மேயர் தேர்தலில் வெற்றி: நேருவின் பேச்சை மேற்கோள்காட்டிய ஸோரான் மம்தானி!
புதன் 5, நவம்பர் 2025 12:43:54 PM (IST)

பொம்மைகளை போல ஆப்கனிஸ்தானை இந்தியா இயக்குகிறது : பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர்
செவ்வாய் 4, நவம்பர் 2025 12:03:35 PM (IST)

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை : தம்பியின் இளவரசர் பட்டத்தை பறித்த மன்னர் சார்லஸ்!
சனி 1, நவம்பர் 2025 11:23:39 AM (IST)

அமெரிக்காவும் சீனாவும் நண்பர்களாக இருக்க வேண்டும்: சீன அதிபர் ஜின்பிங்
வியாழன் 30, அக்டோபர் 2025 12:16:06 PM (IST)

அமீரக லாட்டரியில் இந்தியருக்கு ரூ.250 கோடி பரிசு
புதன் 29, அக்டோபர் 2025 4:46:14 PM (IST)

உக்ரைனில் அணுமின் நிலையம் அருகே நீல நிற நாய்கள்: சமூக ஊடகங்களில் வைரல்!
புதன் 29, அக்டோபர் 2025 12:35:18 PM (IST)


.gif)