» செய்திகள் - விளையாட்டு » உலகம்

தொடு உணர்வு குறித்த ஆராய்ச்சி: அமெரிக்காவின் 2 விஞ்ஞானிகளுக்கு நோபல் பரிசு அறிவிப்பு

திங்கள் 4, அக்டோபர் 2021 5:09:43 PM (IST)



2021ம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு 2 விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்து அளிக்கப்படுகிறது. 

ஒவ்வொரு ஆண்டும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு  நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.அமைதிக்கான நோபல் பரிசு நார்வேயிலும், பிற துறைகளுக்கான நோபல் பரிசு ஸ்வீடன் தலைநகர் ஸ்டோக்ஹோமிலும் அறிவிக்கப்படுகிறது. இந்நிலையில், 2021 ம் ஆண்டிற்கான நோபல் பரிசுகள் இன்று (அக்.5, திங்கள்கிழமை) முதல் அறிவிக்கப்படுகின்றன. முதல் நாளான இன்று மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு உள்ளது.

உடலை தொடாமலேயே வெப்பம், வலி, உடல் அழுத்தம் மற்றும்  இதர விவரங்களை கண்டறியும் சென்சார் கருவியை கண்டுபிடித்ததற்காக கண்டறிந்ததற்காக 2021ம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு அமெரிக்காவைச் சேர்ந்த விஞ்ஞானிகளான டேவிட் ஜூலியஸ்(David Julius), ஆர்டெம் பட்டபௌஷியன்(Ardem Patapoutian) ஆகிய இருவருக்கும் பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.வெப்பம், குளிர் மற்றும் தொடுதல் ஆகியவை நரம்பு மண்டலத்தில் ஏற்படுத்தும் தாக்கம், அது அனுப்பும் சமிக்ஞைகள் குறித்த விஞ்ஞானிகளின் இந்த ஆய்வு, பல்வேறு உடலியல் செயல்முறைகளில் அவற்றின் செயல்பாடுகளை தெளிவுபடுத்துவதுடன் நாள்பட்ட வலி உள்பட பல்வேறு நோய்களுக்கான சிகிச்சைக்குப் பயன்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory