» செய்திகள் - விளையாட்டு » உலகம்

சீனாவில் இருந்து கடந்த 20 ஆண்டுகளில் 5 கொள்ளை நோய்கள் பரவியுள்ளது: அமெரிக்கா குற்றச்சாட்டு

புதன் 13, மே 2020 3:22:04 PM (IST)

சீனாவில் இருந்து கடந்த 20 ஆண்டுகளில் 5 கொள்ளை நோய்கள் பரவியுள்ளதாக அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ராபர்ட் ஓ பிரையன் தெரிவித்துள்ளார்.

வாஷிங்டனில் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ராபர்ட் ஓ பிரையன்  கூறியதாவது: கரோனாவால் உலக நாடுகளில் 2 லட்சத்து 90 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் உயிரிழந்ததற்குச் சீனா தான் பொறுப்பேற்க வேண்டும்.சீனாவின் உகானில் இருந்து தான் கரோனா வைரஸ் பரவியது.

கடந்த 20 ஆண்டுகளில் சார்ஸ், பறவைக் காய்ச்சல், பன்றிக் காய்ச்சல், கரோனா உள்ளிட்ட 5 கொள்ளை நோய்கள் சீனாவில் இருந்து பரவி உள்ளது. கரோனாவைக் கட்டுப்படுத்த மருத்துவ வல்லுநர்களை அனுப்ப அமெரிக்கா முன்வந்தபோது, அதை ஏற்கச் சீனா மறுத்துவிட்டது.  சீனாவில் இருந்து தான் கரோனா வைரஸ் பரவியது என்பதற்கான சான்றுகளை அமெரிக்கா தேடி வருகிறது என கூறினார்.       


மக்கள் கருத்து

உண்மமே 13, 2020 - 04:56:35 PM | Posted IP 108.1*****

நோயின் பிறப்பிடம் சீனா .

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory