» செய்திகள் - விளையாட்டு » உலகம்

உள்நாட்டு போரை நிறுத்திவிட்டு கரோனாவுக்கு எதிராக போராடுங்கள்: போப் பிரான்சிஸ் அறிவுரை

திங்கள் 30, மார்ச் 2020 10:29:14 AM (IST)

பிரான்சிஸ் உள்நாட்டு போரை நிறுத்திவிட்டு கரோனாவுக்கு எதிராக போராட வேண்டுமென போப் பிரான்சிஸ் அறிவுறுத்தியுள்ளார்

சீனாவில் உருவான உயிர்க்கொல்லி கரோனா உலகம் முழுவதும் 180-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி ஆட்டிப்படைத்து வருகிறது. ஏற்கனவே உள்நாட்டு போரால் சிதைந்துள்ள ஆப்கானிஸ்தான், லிபியா, சிரியா போன்ற நாடுகளையும் கரோனா விட்டு வைக்கவில்லை.எனவே இந்த இக்கட்டான சூழ்நிலையில் உள்நாட்டு போரை நிறுத்தி விட்டு கரோனா வைரசை ஒழிப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்ரெஸ் சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இந்நிலையில் ஆன்டனியோ குட்ரெசின் அழைப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ள போப் பிரான்சிஸ் உள்நாட்டு போரை நிறுத்திவிட்டு கரோனாவுக்கு எதிராக போராட வேண்டுமென அறிவுறுத்தியுள்ளார்.இதுபற்றி அவர் கூறுகையில், "உலகம் முழுவதும் கரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுடன் என் எண்ணங்கள் உள்ளன. கரோனா வைரசுக்கு எதிரான ஒரு உலகளாவிய போரில் நாம் ஒன்றிணைந்து கவனம் செலுத்த வேண்டும். இதற்கு உள்நாட்டு போரை நிறுத்த வேண்டியது அவசியம்” என கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Thoothukudi Business Directory