» செய்திகள் - விளையாட்டு » உலகம்

கரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஸ்பெயின் இளவரசி பலி : பொதுமக்கள் அதிர்ச்சி!!

ஞாயிறு 29, மார்ச் 2020 5:33:31 PM (IST)

கரோனா வைரஸ் தொற்று காரணமாக ஸ்பெயின் அரச குடும்பத்தை சேர்ந்த இளவரசி மரியா தெரசா உயிரிழந்தார்.

சீனாவில் உருவான கரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் ருத்ர தாண்டவம் ஆடி வருகிறது. இதையடுத்து, அனைத்து நாடுகளும் கரோனா வைரசை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. கரோனா வைரசால் உலகம் முழுவதிலும் 6.5 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகிலேயே அதிகபட்ச உயிரிழப்பை கொண்டுள்ள நாடுகளில் இத்தாலி முன்னிலையில் உள்ளது. அங்கு 92 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு, 10,023 பேர் பலியாகியுள்ளனர்.

இத்தாலியை தொடர்ந்து ஸ்பெயினிலும் கரோனாவுக்கு நேற்று மட்டும் 674 பேர் பலியாகியுள்ளனர். இதனால் அந்நாட்டில் வைரஸ் தாக்குதலுக்கு மொத்தம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆயிரத்து 812 ஆக உயர்ந்துள்ளது.இந்நிலையில், கரோனா வைரஸ் தொற்று காரணமாக ஸ்பெயின் அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசி மரியா தெரசா உயிரிழந்தார்.ஸ்பெயின் நாட்டில் பரவிய கரோனா தொற்றால் அந்நாட்டு இளவரசி மரியா தெரசா (86), பாதிக்கப்பட்டு பிரான்ஸ் தலைநகர் பாரீசில் சிகிச்சை பெற்று வந்தார். வைரஸ் தொற்றின் காரணமாக அவர் உயிரிழந்தார். அரச குடும்பத்தை சேர்ந்த ஒருவர் கரோனா வைரஸ் தொற்றால் பலியானது ஸ்பெயின் நாட்டு மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory