» செய்திகள் - விளையாட்டு » உலகம்

உலகளவில் கரோனா வைரசால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7,157 ஆக அதிகரிப்பு

செவ்வாய் 17, மார்ச் 2020 12:19:47 PM (IST)

உலகளவில் கரோனா வைரசால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7,157 ஆக அதிகரித்துள்ளது.

சீனாவின் உகான் நகரில் தோன்றி உலகம் முழுவதும் 155 நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ளது. இத்தாலி, ஈரான் போன்ற நாடுகளில் கரோனா வைரஸ் மிகக் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கரோனா வைரசால்  உயிரிழந்தோரின் எண்ணிக்கை உலகளவில் 7,157 ஆக உயர்ந்துள்ளது. 

இதுவரை, 1,82,438 பேருக்கு தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. அதில், 79 ஆயிரத்து, 212 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். சீனாவில் 3,226 பேர், இத்தாலியில் 2,158 பேர், ஈரானில் 853, ஸ்பெயினில் 342 பேர் பலியாகி உள்ளனர். இந்தியாவில் கரோனா பாதிப்பு 123 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக  மராட்டிய மாநிலத்தில் 39, கேரளாவில் 24, உத்தர பிரதேசத்தில் 13, கர்நாடகாவில் 8, தெலுங்கானாவில் 4 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory