» செய்திகள் - விளையாட்டு » உலகம்

கரோனாவை எதிர்கொள்ள சார்க் நாடுகளுக்கு பிரதமர் மோடி அழைப்பு : பாகிஸ்தான் ஏற்பு

சனி 14, மார்ச் 2020 5:47:55 PM (IST)

கரோனா வைரஸை எதிர்கொள்ள வலிமையா செயல்திட்டம் வகுக்க சார்க் நாடுகளின் தலைவர்கள் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் பேச வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி விடுத்த அழைப்பை ஏற்பதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.

உலக நாடுகள் கரோனா வைரஸ் பரவலை தடுக்க போராடி வருகின்றன. இந்தியா மற்றும் அதன் அண்டை நாடுகளிலும் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் மூலமாக கரோனா வைரஸ் பரவி வருகிறது. இந்நிலையில் 8 தெற்காசிய நாடுகளின் கூட்டமைப்பான சார்க் (SAARC) நாடுகளின் தலைவர்கள் கரோனாவை எதிர்கொள்ள வலிமையான செயல்திட்டத்தை ஒன்றிணைந்து உருவாக்க வேண்டும். அது குறித்து வீடியோ கான்பிரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்த சார்க் நாடுகள் முன்வர வேண்டும் என்று பிரதமர் மோடி நேற்று டுவிட்டரில் அழைப்பு விடுத்திருந்தார்.

அவர் அழைப்பு விடுத்த சில மணி நேரங்களில் இலங்கை மற்றும் மாலத்தீவு அரசுகள் பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்பதாக அறிவித்தன. அதைத் தொடர்ந்து பாகிஸ்தான் அரசும் வீடியோ கான்பிரஸ் மூலமாக கரோனா குறித்து ஆலோசிக்க பிரதமர் மோடி விடுத்த அழைப்பை ஏற்பதாக இன்று அறிவித்துள்ளது. இது குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ஆயிஷா ஃபரூக்கி "கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சார்க் நாடுகளுடன் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் ஆலோசிக்க பாகிஸ்தான் பிரதமரின் சிறப்பு சுகாதாரத்துறை செயலாளர் ஜஃபார் மிர்ஸா தயாராக உள்ளார் என  தெரிவித்துள்ளார். 

பாகிஸ்தானில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஜஃபார் மிர்ஸா தலைமை பொறுப்பு ஏற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.பாகிஸ்தானில் இதுவரை 28 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. வைரஸ் பரவலை தடுக்க நேற்று ஆப்கன் மற்றும் ஈரானுடனான எல்லைகளை பாகிஸ்தான் மூடியது. சிந்து மாகாணத்தில் பள்ளி, கல்லூரிகள் மே மாதம் வரை மூடப்பட்டுள்ளன. மேலும் கர்தார்பூர் வழித்தடத்தை பயன்படுத்த பாகிஸ்தானியர்களுக்கு தடை விதித்துள்ளது. அதேசமயம் கர்தார்பூர் வரும் இந்திய யாத்திரிகர்களுக்கு தடை விதிக்கப்படவில்லை.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory