» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இத்தாலியில் கொரோனா வைரசால் உயிரிழப்பு 366 ஆக உயர்வு : சீனாவில் கட்டுக்குள் வருகிறது பாதிப்பு

திங்கள் 9, மார்ச் 2020 11:56:23 AM (IST)

இத்தாலியில் கரோனா வைரஸ் பாதிப்பால் பலியானோரின் எண்ணிக்கை 366 ஆக உயர்ந்துள்ளது. சீனாவில் கரோனா வைரஸ் பரவுவது ஓரளவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. 

கரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. சீனாவில் இருந்து பரவ தொடங்கிய இந்த கொடிய வைரஸ் உலகம் முழுவதும் உயிர்பலி வாங்கி வருகிறது. இந்தியாவிலும் கரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் கண்டறியப்பட்டு உள்ளனர். சீனாவில் மட்டும் கரோனா வைரசால் 3042 பேர் பலியாகியுள்ளனர். தென்கொரியா,  ஈரான், இத்தாலி உள்ளிட்ட நாடுகளிலும் கரோனா வைரஸ் கடும் பாதிப்பை ஏற்படுத்திவருகிறது. கரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் நோக்கில் இத்தாலியில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

வைரஸ் பரவுவதை தடுக்க இத்தாலி அரசு பல்வேறு கட்டுபாடுகளை விதித்துள்ளது. இருந்த போதிலும், வைரஸ் பாதிப்பால், பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளது. இந்நிலையில் இத்தாலியில் கரோனா வைரஸ் பாதிப்பால் பலியானோரின் எண்ணிக்கை 366 ஆக உயர்ந்துள்ளது.  கரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7375 ஆக உயர்ந்துள்ளது. ஏற்கனவே, மக்கள் பொது இடங்களில் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள இத்தாலி அரசு கைகுலுக்குதல் , முத்தமிடுதல் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும் என்று அந்நாட்டு மக்களை கேட்டுக்கொண்டுள்ளது. மேலும் வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் அந்நாட்டு பிரதமர் கியூசெப் கோன்டே வடக்கு மற்றும் மத்திய பகுதிகளில் பயணக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்.

சீனாவில் கட்டுக்குள் வருகிறது பாதிப்பு

சீனாவில் கொரோனா வைரஸ் பரவுவது ஓரளவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக அந்நாட்டு சுகாதாரத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருந்த போதிலும், வைரஸ் பாதிப்பால், பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளது.   இந்நிலையில், சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் மேலும் 22 பலியாகியுள்ளனர். இதையடுத்து பலியானவர்களின் எண்ணிக்கை 3,070 லிருந்து 3,119 ஆக உயர்ந்துள்ளது.  பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 80,651 லிருந்து 80,735 ஆக உயர்ந்துள்ளது.

மக்கள் கருத்து

கட்டுக்கதைMar 12, 2020 - 11:59:44 AM | Posted IP 162.1*****

ஒரு ஊரில் ஒரு நாய் இருந்ததாம், பயங்கர சேட்டை செய்ததாம் பின்னர் மக்கள் ஒன்றுசேர்ந்து அந்த நாயை கல்லால் அடித்து கொன்றார்களாம், அடித்த அடியில் நாயின் உடல் சிதறி செத்ததாம்....பின்னர் நாலு நாட்கள் கழித்து மீண்டும் லொள் லொள் என குழைத்ததாம்...கதை நல்லா இருக்கா

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory