» செய்திகள் - விளையாட்டு » உலகம்

சீனாவில் கரோனா வைரஸ் பாதிப்பினால் 2943 பேர் உயிரிழப்பு: ஈரானில் 66 பேர் பலி

செவ்வாய் 3, மார்ச் 2020 4:27:48 PM (IST)சீனாவில் கரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்தவர்களின்  எண்ணிக்கை 2,943 ஆக உயர்ந்துள்ளது.

சீனாவில் ஹுபெய் மாகாணம் வுகான் நகரில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் பரவத் தொடங்கிய ஆட்கொல்லி கரோனா வைரஸ் சீனா மட்டுமின்றி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. சீனாவில் மிகப்பெரிய மனித பேரழிவை ஏற்படுத்தி உள்ள இந்த நோய், சீனாவுக்கு வெளியே சுமார் 60 நாடுகளில் பரவி உள்ளது. சீனாவில் கடந்த சில தினங்களாக கரோனா வைரஸ் தாக்கம் குறையத் தொடங்கி உள்ளது. இந்நிலையில் சீனாவில் நேற்று மேலும் 31 பேர் கரோனா வைரசுக்கு பலியாகி உள்ளனர். 

இதன்மூலம் சீனாவில் கரோனா வைரஸ் பாதிப்புக்கு பலியானோரின் எண்ணிக்கை 2,943 ஆக உயர்ந்திருப்பதாக தேசிய சுகாதார ஆணையம் கூறி உள்ளது. மொத்தம் 80 ஆயிரத்து 151 பேர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் உள்ளனர். கரோனா வைரஸ் பாதிப்பு உள்ள 31 மாகாணங்களிலும் 47 ஆயிரத்து 204 பேர் சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். உலக அளவில் கரோனா வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை 3000ஐ தாண்டி உள்ளது. சீனாவுக்கு வெளியே அதிகபட்சமாக ஈரானில் 66 பேர் உயிரிழந்துள்ளனர். தென்கொரியாவில் 28 பேர் பலியாகி உள்ளனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory