» செய்திகள் - விளையாட்டு » உலகம்

தலிபான் கைதிகளை விடுதலை செய்ய முடியாது: ஆப்கான் அதிபர் திட்டவட்டம்

ஞாயிறு 1, மார்ச் 2020 6:59:55 PM (IST)

ஆப்கான் சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ள சுமார் 5 ஆயிரம் தலிபான் பயங்கரவாதிகளை விடுதலை செய்ய மாட்டோம் என அதிபர் அஷ்ரப் கானி அறிவித்துள்ளார்.

ஆப்கானில் 2001-ம் ஆண்டில் இருந்து அரசுப் படைகள் மற்றும் தலிபான்கள் இடையில் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டு வர அந்நாட்டு அரசின் உதவியோடு தலிபான்களுடன் கடந்த சில மாதங்களாக அமெரிக்கா அமைதி பேச்சுவார்த்தை நடத்தியது. இதற்கான அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட அமெரிக்காவும், தலிபான் பயங்கரவாத அமைப்பும் ஒப்புதல் அளித்தன.

சமீபத்தில் அங்கு ஒரு வார காலம் சண்டை நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இதனால் ஆப்கானில் தலிபான் தாக்குதல்கள் வெகுவாக குறைந்துள்ளது. இதற்கிடையே, மத்திய கிழக்கு நாடான கத்தார் தலைநகர் தோகாவில் அமெரிக்கா மற்றும் தலிபான் அமைப்பினர் இடையே அமைதி ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது. இதன்மூலம் 20 ஆண்டுகாலப் போர் முடிவுக்கு வருகிறது. அடுத்த 14 மாதங்களில் அமெரிக்கா தனது படைகளை ஆப்கானில் இருந்து விலக்கிக் கொள்ள முடிவு செய்துள்ளது.

அமெரிக்காவின் இந்த சமரச ஏற்பாட்டின் ஒரு பகுதியாக ஆப்கான் அரசால் கைது செய்யப்பட்டு, சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ள சுமார் 5 ஆயிரம் தலிபான் கைதிகளை விடுதலை செய்யும் பொறுப்பை அமெரிக்க அரசு ஏற்றுக்கொள்வதாக வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், தலிபான் பயங்கரவாதிகளை விடுதலை செய்ய மாட்டோம் என ஆப்கான் அதிபர் அஷ்ரப் கானி இன்று தெரிவித்துள்ளார்.

தலைநகர் காபுலில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அஷ்ரப் கானி, கைதிகளை விடுதலை செய்வது தொடர்பான வாக்குறுதி அமெரிக்காவால் அளிக்கப்படக் கூடியதல்ல. இது தொடர்பான எனது அரசுத்தான் தீர்மானிக்க வேண்டும். ஆனால், பேச்சுவார்த்தை ஆரம்பிப்பதற்குள் கைதிகளை விடுதலை செய்ய நான் தயாராக இல்லை. தலிபான் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என அமெரிக்கா தரப்பில் இருந்து எங்களிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா நடத்திய பேச்சுவார்த்தையின் ஒருபகுதியாக வேண்டுமானால் இந்த கோரிக்கை இருக்கலாம். ஆனால், இதை முன்நிபந்தனையாக எங்களிடம் வலியுறுத்தக் கூடாது என தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து

உண்மைMar 11, 2020 - 03:44:42 PM | Posted IP 108.1*****

அவனுக்கு கூட அறிவு இருக்கு! இங்கு முன்னாள் பிரதமரை கொன்றவர்களுக்கு தியாகி போல கௌரவம்!

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Thoothukudi Business Directory