» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இலங்கை பிரதமராக மகிந்த ராஜபட்ச பதவியேற்பு: இந்திய பிரதமர் மோடி வாழ்த்து

வியாழன் 21, நவம்பர் 2019 4:43:08 PM (IST)

இலங்கையின் புதிய பிரதமராக மகிந்த ராஜபட்ச இன்று (வியாழக்கிழமை) பதவியேற்றுக்கொண்டார்.

இலங்கையில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற அதிபர் தேர்தலில் தனது கட்சி வேட்பாளர் சஜித் பிரேமதாசா தோல்வியடைந்ததையடுத்து, பிரதமர் ரணில் விக்ரமசிங்கே ராஜிநாமா செய்வதாக நேற்று  அறிவித்தார். அதனைத் தொடர்ந்து, அந்தப் பதவிக்கு மகிந்த ராஜபட்சவின் பெயரை அவரது சகோதரரும், அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றவருமான கோத்தபய ராஜபட்ச அறிவித்தார்.

இதையடுத்து, ரணில் விக்ரமசிங்கே இன்று முறைப்படி பதவியில் இருந்து விலகினார். இதைத்தொடர்ந்து, புதிய பிரதமராக மகிந்த ராஜபட்ச பதவியேற்றுக்கொண்டார். இதன்மூலம் இலங்கையின் முழு அதிகாரமும் தற்போது, விடுதலைப் புலிகளுடனான இறுதிகட்டப் போரை இரக்கமற்ற முறையில் நடத்தியதாகக் குற்றம் சாட்டப்படும் ராஜபட்ச சகோதரர்கள் கையில் மீண்டும் வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கெனவே, பிரதமர் விக்ரமசிங்கவை பதவியிலிருந்து அகற்றிவிட்டு மகிந்த ராஜபட்சவை முன்னாள் அதிபர் மைத்ரிபால சிறீசேனா கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 26-ஆம் தேதி பிரதமராக நியமித்தார். எனினும், அந்த முடிவுக்கு எதிராக உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதையடுத்து, ராஜபட்ச தனது பதவியை ராஜிநாமா செய்தார்.  கடந்த 2005-ஆம் ஆண்டு முதல் 2015-ஆம் ஆண்டு வரை அதிபராகப் பொறுப்பு வகித்த மகிந்த ராஜபட்ச, தெற்காசியாவில் மிக நீண்ட காலம் அதிபர் பொறுப்பை வகித்தவர் ஆவார். அத்துடன், தனது 24-ஆவது வயதில் (1970-ஆம் ஆண்டு) நாடாளுமன்ற உறுப்பினரான அவர்தான், இலங்கையில் அந்தப் பொறுப்பை ஏற்ற மிக இளைய வயதினர் ஆவார்.

பிரதமர் மோடி வாழ்த்து

இந்நிலையில், இலங்கையின் புதிய பிரதமராக பதவியேற்றுக் கொண்ட மகிந்த ராஜபக்சேகேவுக்கு இந்திய பிரதமர் மோடி வாழ்த்துக்களை தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில். இலங்கையின் புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ள மகிந்த ராஜபக்சேவுக்கு வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory