» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இந்தியாவுக்கு ஒரு பில்லியன் டாலர் மதிப்புள்ள ஆயுதங்களை விற்பனை: அமெரிக்கா ஒப்புதல்

வியாழன் 21, நவம்பர் 2019 12:24:04 PM (IST)

இந்தியாவுக்கு ஒரு பில்லியன் டாலர் மதிப்புள்ள 13 கடற்படை துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களை விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது.

அமெரிக்க பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி அமெரிக்க அரசாங்கம் இந்தியாவுக்கு 13 எம்.கே.45 ரக கடற்படை துப்பாக்கிகள் மற்றும் ராணுவ உபகரணங்களை விற்பனை செய்ய ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவித்துள்ளது. இவற்றின் மொத்த மதிப்பு சுமார் ஒரு பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆயுதங்கள், உதிரி பாகங்கள், அவற்றை கையாள்வதற்கான பயிற்சி, தொழில்நுட்ப விவரங்கள் மற்றும் போக்குவரத்து செலவுகள் ஆகியவை இதில் அடங்கும். இந்த ராணுவ வியாபாரம் மூலம் தங்கள் நாட்டின் வெளியுறவு கொள்கை மற்றும் தேசிய பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என அமெரிக்க அரசாங்கம் தெரிவித்துள்ளது. மேலும் இந்தியா நிகழ்காலத்திலும், எதிர்காலத்திலும் தனது எதிரிகளை திறன்பட எதிர்கொள்ள இந்த ஆயுதங்கள் உதவியாக அமையும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory