» செய்திகள் - விளையாட்டு » உலகம்

தலிபான்களால் 3 ஆண்டுகள் முன்பு கடத்தி செல்லப்பட்ட 2 வெளிநாட்டினர் விடுவிப்பு

புதன் 20, நவம்பர் 2019 12:41:44 PM (IST)

தலிபான் பயங்கரவாதிகளால் மூன்று ஆண்டுகள் முன்பு கடத்தி செல்லப்பட்ட இரண்டு வெளிநாட்டினர்  விடுவிக்கப்பட்டனர். 

அமெரிக்காவை சேர்ந்த கெவின் கிங் மற்றும் ஆஸ்திரேலியாவை சேர்ந்த டிமோதி வீக்ஸ் இருவரும் ஆப்கன் தலைநகர் காபூலில் உள்ள அமெரிக்க பல்கலைகழகத்தில் பேராசியர்களாக பணியாற்றி வந்தனர். கடந்த 2016ம் ஆண்டு இவர்கள் இருவரும் தலிபான்களால் கடத்தி செல்லப்பட்டனர். பின்னர் அவர்களின் வீடியோவை தலிபான்கள் வெளியிட்டனர். இரு பேராசியர்களையும் மீட்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தோல்வியில் முடிந்தன

இந்நிலையில் கடத்தி செல்லப்பட்ட 2 பேராசிரியர்களையும் விடுவித்தால் அவர்களுக்கு பதிலாக சிறையில் இருக்கும் 3 முக்கிய தலிபான் தலைவர்களான ஆனஸ் ஹக்கானி, ஹாஜி மாலி கான் மற்றும் அப்துல் ரஷித் ஆகியோர் விடுதலை செய்யப்படுவார்கள் என்று அதிபர் அஷ்ரஃப் கானி கடந்த வாரம் அறிவித்தார். ஆப்கன் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வரும் தலிபான்களை நேரடி பேச்சுவார்த்தைக்கு சம்மதிக்க வைக்கும் முயற்சியாக அஷ்ரஃப் கானி இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

ஆப்கன் அதிபரின் நிபந்தனையை ஏற்றுக்கொண்ட தலிபான்கள் கெவின் கிங் மற்றும் டிமோதி வீக்ஸ் இருவரையும் விடுவிக்க சம்மதம் தெரிவித்தனர். அதன்படி நேற்று காலை 10 மணியளவில் இரண்டு பேராசிரியர்களும் ஜாபுல் மாகாணத்தில் உள்ள நவ்பஹார் மாவட்டத்தில் விடுவிக்கப்பட்டனர். அவர்களை அமெரிக்க ராணுவம் ஜாபுலில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் அழைத்து சென்றது. இதுகுறித்து செய்தி வெளியிட்ட தலிபான் ‘‘நிபந்தனையின்படி நாங்கள் பேராசிரியர்களை விடுவித்து விட்டோம். இனி சிறையில் இருக்கும் தலிபான் தலைவர்களை ஆப்கன் அரசு மற்றும் அமெரிக்கா விரைவில் விடுதலை செய்யும் என எதிர்பார்க்கிறோம்’’ என்று தெரிவித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory