» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இனி எந்த சூழலிலும் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை கிடையாது: ஈரான் திட்டவட்டம்

புதன் 18, செப்டம்பர் 2019 10:19:05 AM (IST)

இனி எந்த ஒரு சூழலிலும் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தையே கிடையாது என ஈரான் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது.

சவுதி அரேபியாவின் எண்ணெய் ஆலை மீது ஈரான்தான் தாக்குதலை நடத்தியது என்று கூறி அதற்கு ஆதாரமாக ஒரு செயற்கைகோள் படத்தையும் அமெரிக்கா வெளியிட்டது. இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க அமெரிக்க ராணுவம் தயார் நிலையில் இருப்பதாக டிரம்ப் குறிப்பிட்டார். இந்த தாக்குதலால் கச்சா எண்ணெய் உற்பத்தி நிறுத்தப்பட்டு அதன் விலையும் உயர்ந்துவிட்டது. எனினும் எண்ணெய் ஆலை மீதான தாக்குதல் குறித்து ஈரான் கூறுகையில் அமெரிக்கா தங்கள் மீது சுமத்தும் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை என ஈரான் கூறியது. 

அத்தோடு இதுபோன்ற குற்றச்சாட்டுகளை தொடர்ந்து கூறி வந்தால் போரை சந்திக்க வேண்டிய சூழல் ஏற்படும் என எச்சரிக்கை விடுத்தது. இந்த நிலையில் இனி எந்த சூழலிலும் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த மாட்டோம் என ஈரான் தலைவர் அயத்துலா அலி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தும் எந்த திட்டமும் இல்லை. சவுதி அரேபியாவில் உள்ள எண்ணெய் ஆலை தாக்குதல் சம்பவத்தை பயன்படுத்தி ஈரானுக்கு அழுத்தம் கொடுக்க அமெரிக்கா திட்டமிடுவது எங்களுக்கு தெரிகிறது. ஆனால் அதற்கெல்லாம் நாங்கள் பலிக்கிடா ஆக மாட்டோம். அமெரிக்காவுடன் இனி பேச்சுவார்த்தை நடத்துவதில் எந்த பயனும் இல்லை என கூறினார் அலி.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory