» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி: பாகிஸ்தான் வெளியே பிரிட்டன் எம்.பி. வலியுறுத்தல்

திங்கள் 16, செப்டம்பர் 2019 4:47:40 PM (IST)

ஜம்மு காஷ்மீர் முழுதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி. அங்கிருந்து பாகிஸ்தான் ராணுவத்தினர் வெளியேற வேண்டும் என்று பிரிட்டன் எம்.பி. பாப் பிளாக்மேன் வலியுறுத்தியுள்ளார்.

பிரிட்டனில் வசிக்கும் காஷ்மீர் பண்டிட் சமூகத்தின் சார்பில் தியாகிகள் தினம் குறித்து நடந்த நிகழ்ச்சியில் பிரிட்டன் கன்சர்வேட்டிவ் கட்சி எம்.பி. பாப் பிளாக்மேன் கலந்துக் கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை கடந்த ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி இந்தியா ரத்து செய்து, சட்டப்பிரிவு 370-ஐ திரும்பப் பெற்றது. இந்த முடிவை பாகிஸ்தான் ஐக்கிய நாடுகள் சபையில் எழுப்ப திட்டமிட்டுள்ளது.

ஆனால், ஜம்மு காஷ்மீர் முழுதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி. ஐ.நாவில் பாகிஸ்தான் தீர்மானம் கொண்டுவந்தால் அதை உறுப்பு நாடுகள் நிச்சயம் தோற்கடிக்க வேண்டும். காஷ்மீரில் இருக்கும் பாகிஸ்தான் ராணுவத்தினர் வெளியேற வேண்டும். பிரதமர் மோடியின்  அரசு, ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 பிரிவை நீக்கியதை நான் ஆதரிக்கிறேன். பாஜக வலிமையான தலைவர்களை கொண்டுள்ளதை உணர்த்துகிறது. ஜம்மு காஷ்மீரை முறைப்படி இந்தியாவுக்குள் ஒருங்கிணைக்க இதுதான் சரியான நேரம்.

ஜம்மு காஷ்மீர் குறித்து எதிர்மறையான கருத்துக்களை இங்கிலாந்து எம்.பி.க்கள் தெரிவிப்பது எனக்கு கவலை அளித்திருக்கிறது.  இது குறித்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கடிதம் எழுதியிருக்கிறேன்.ஜம்மு காஷ்மீர் தொடர்பாக பாகிஸ்தான் ஐ.நாவில் தீர்மானம் கொண்டுவருவதற்கு முன், அந்நாடு ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இருந்து வெளியேற வேண்டும். ஜம்மு காஷ்மீர் இந்திய இறையாண்மைக்கு உட்பட்ட பகுதி. இவ்வாறு அவர் கூறியுள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory