» செய்திகள் - விளையாட்டு » உலகம்

சவூதி எண்ணெய் ஆலைகளில் தாக்குதல் எதிரொலி: கச்சா எண்ணெய் உற்பத்தி திடீர் குறைப்பு

திங்கள் 16, செப்டம்பர் 2019 10:31:15 AM (IST)சவூதி அரேபியாவின் அராம்கோ நிறுவனத்துக்குச் சொந்தமான எண்ணெய் ஆலைகளில் நடத்தப்பட்ட ஆளில்லா விமானத் தாக்குதல் காரணமாக, அந்த ஆலைகளில் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதையடுத்து, உலகின் மிகப் பெரிய கச்சா எண்ணெய் ஏற்றுமதியாளரான அந்த நிறுவனத்தின் உற்பத்தி பாதியாகக் குறைந்துள்ளது.

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது: சவூதி அரேபியாவின் அப்காய்க் மற்றும் குராயிஸ் பகுதிகளிலுள்ள அராம்கோ நிறுவனத்தின் எண்ணெய் ஆலைகளில் ஆளில்லா விமானங்கள் மூலம் சனிக்கிழமை அதிகாலை தாக்குதல் நடத்தப்பட்டது. அந்தத் தாக்குதலுக்கு, அண்டை நாடான யேமனில் இயங்கி வரும் ஹூதி கிளர்ச்சியாளர்கள் பொறுப்பேற்றனர்.

தாக்குதலுக்குள்ளான அப்காய்க் ஆலை, உலகின் மிகப் பெரிய கச்சா எண்ணெய் உற்பத்தி ஆலையாகும். மேலும், குராயிஸ் பகுதியில் அமைந்துள்ள எண்ணெய் வயல், சவூதி அரேபியாவின் மிக முக்கிய எண்ணெய் வயல்களில் ஒன்றாகும். ஆளில்லா விமானத் தாக்குதல் காரணமாக அந்த ஆலையிலும், எண்ணெய் வயலிலும் தீப்பற்றி, கொழுந்துவிட்டு எரிந்தது. தற்போது அந்தத் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக அராம்கோ நிறுவனம் தெரிவித்தாலும், அந்தப் பகுதிகளில் உற்பத்தியை நிறுத்திவைத்துள்ளதாக அந்த நிறுவனம் கூறியுள்ளது.

இதையடுத்து, அராம்கோவின் கச்சா எண்ணெய் உற்பத்தி ஏறத்தாழ பாதி அளவுக்குக் குறைந்துள்ளது. உலகின் மிகப் பெரிய கச்சா எண்ணெய் ஏற்றுமதியாளரான அராம்கோவின் உற்பத்தி இந்த அளவுக்குக் குறைந்துள்ளது, சர்வதேச கச்சா எண்ணெய் விநியோகத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று அஞ்சப்படுகிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory