» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இந்தியாவின் நடவடிக்கையால் பயங்கரவாதம் மேலும் வளரும்: இம்ரான்கான் எச்சரிக்கை

சனி 14, செப்டம்பர் 2019 4:27:55 PM (IST)காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவின் நடவடிக்கையால் பயங்கரவாதம் மேலும் வளரும் என எச்சரிக்கை விடுப்பதாக பாக். பிரதமர் இம்ரான்கான் கூறினார். 

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் தலைநகரம் முசாபராபாத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான் கலந்து கொண்டார். அதில் அவர் பேசியதாவது: காஷ்மீர் விவகாரம் ஒரு சர்வதேச பிரச்சினையாகும். இது குறித்து ஐரோப்பிய யூனியனும், இங்கிலாந்து பல்கலைக்கழகமும் விவாதித்து வருகின்றன. காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை இந்தியா ரத்து செய்துள்ளது. அந்த மாநிலத்தை 2 ஆக பிரித்து யூனியன் பிரதேசங்களாக மாற்றியுள்ளது. காஷ்மீரில் இந்தியா மேற்கொள்ளும் இத்தகைய நடவடிக்கையால், அங்கு பயங்கரவாதம் மேலும் வளரும். இதை இந்தியாவுக்கு எச்சரிக்கையாக தெரிவிக்கிறேன்.

அடுத்த வாரம் ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் நான் கலந்து கொண்டு உரையாற்ற இருக்கிறேன். அப்போது நான் காஷ்மீர் மக்களை ஏமாற்ற மாட்டேன். கடந்த காலங்களில் யாரும் செய்யாத வகையில் அவர்களின் உரிமைகளுக்கு ஆதரவாக குரல் கொடுப்பேன். கடந்த பிப்ரவரி 14-ந்தேதி புல்வாமாவில் புகுந்து இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. இந்தியாவின் இத்தகைய தாக்குதலுக்கு பாகிஸ்தான் தக்க பதிலடி கொடுக்கும். இந்தியா செங்கலை வீசினால், நாங்கள் கல் மூலம் திருப்பி தாக்குவோம்” இவ்வாறு இம்ரான்கான் பேசினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory