» செய்திகள் - விளையாட்டு » உலகம்
இந்தியா -பாகிஸ்தான் இடையேயான பதற்றம் தணிந்துள்ளது: அமெரிக்க அதிபர் டிரம்ப்
செவ்வாய் 10, செப்டம்பர் 2019 11:52:18 AM (IST)
இந்தியா - பாகிஸ்தான் இடையேயான பதற்றம் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு இருந்ததை போல் இல்லாமல், தற்போது பதற்றம் தணிந்து இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

கடந்த இரு வாரங்களுக்கு முன் ஜி 7 மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும் பிரதமர் மோடியும் சந்தித்துக்கொண்டனர். இந்த சந்திப்புக்குப் பிறகு முதல் முறையாக அமெரிக்கா காஷ்மீர் விவகாரம் பற்றி கருத்து கூறியுள்ளது கவனிக்கத்தக்கது. காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து நடவடிக்கையால், இந்தியா மீது கடும் அதிருப்தி அடைந்த பாகிஸ்தான், இந்த விவகாரத்தை உலக நாடுகளிடம் கொண்டு போனது. எனினும், காஷ்மீர் விவகாரத்தில் சர்வதேச நாடுகளின் ஆதரவு பாகிஸ்தானுக்குக் கிடைக்காததால், இந்தியாவுக்கு எதிராகப் பதற்றம் அளிக்கும் வகையில் வார்த்தை பிரயோகங்களை அந்நாட்டு அரசியல் தலைவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இந்திய குடியரசு தினம்: இலங்கை பிரதமர் ராஜபட்ச வாழ்த்து
செவ்வாய் 26, ஜனவரி 2021 9:59:15 PM (IST)

பொருளாதார சரிவு: மிகப்பெரிய பூங்காவை ரூ.50 ஆயிரம் கோடிக்கு அடகு வைக்கும் இம்ரான்கான்!!
திங்கள் 25, ஜனவரி 2021 4:46:35 PM (IST)

இந்தியா அனுப்பிய 20 லட்சம் கரோனா தடுப்பூசிகள் சென்றடைந்தது: மோடிக்கு பிரேசில் அதிபர் நன்றி
ஞாயிறு 24, ஜனவரி 2021 1:30:46 PM (IST)

ஒட்டுமொத்த உலகுக்கும் கரோனாவை வழங்கிய சீனாவின் உகான் நகரில் இயல்பு நிலை திரும்பியது
ஞாயிறு 24, ஜனவரி 2021 1:27:27 PM (IST)

பிரிட்டனில் உருமாற்றம் அடைந்த கரோனா வைரசால் இறப்பு விகிதம் அதிகரிப்பு : போரிஸ் ஜான்சன்
சனி 23, ஜனவரி 2021 11:38:06 AM (IST)

டிரம்பின் கொள்கைகளுக்கு எதிராக 15 ஆணைகள்: பதவியேற்ற முதல் நாளிலேயே பைடன் அதிரடி!
வியாழன் 21, ஜனவரி 2021 12:01:10 PM (IST)
