» செய்திகள் - விளையாட்டு » உலகம்
சந்திரயான் -2 பின்னடைவு: இந்தியா தோற்றுவிட்டதாக பாகிஸ்தான் அமைச்சர் கிண்டல்
சனி 7, செப்டம்பர் 2019 12:12:28 PM (IST)
சந்திரயான் -2 விண்கலத்தின் லேண்டர் நிலவில் தரையிரங்குவதற்குள் அதன் சிக்னல் துண்டிக்கப்பட்டதை பாகிஸ்தான் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பகத் உசேன் கிண்டல் செய்துள்ளார்.

பாகிஸ்தானின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பகத் உசேன், இஸ்ரோ விஞ்ஞானிகளின் தோல்வியையும், பிரதமர் மோடியையும் கிண்டல் செய்து ட்விட்டரில் பதிவுகளை வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து இந்திய நெட்டிசன்கள் பலர் உசேனை விமர்சித்துப் பதிவிட்டனர். இதற்கு உசேன் தனது ட்விட்டர் பக்கத்தில் சந்திரயான்-2 தோல்விக்கு நான் தான் காரணம் என்பது போல் இந்தியர்கள் என்னை கிண்டல் செய்வதைக் கண்டு ஆச்சரியமாக உள்ளது என்று பதிவிட்டு இந்தியா தோற்றுவிட்டது என்ற ஹேஷ்டேக்கையும் பதிவிட்டு உள்ளார்.
காங்கிரஸ் கண்டனம்
பாகிஸ்தான் அமைச்சரின் கருத்துக்கு காங்கிரசின் சல்மான் அனீஸ் சோஸ் கண்டனம் தெரிவித்து உள்ளார்.விண்வெளி தொழில்நுட்பத்தில் இந்தியாவின் சாதனைகளை உங்கள் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சரால் பாராட்ட முடியாவிட்டால், அவர் பாகிஸ்தானுக்கு என்ன செய்ய முடியும்? இந்தியாவின் விக்ரம் லேண்டர் குறித்து அவர் மகிழ்ச்சி அடைந்து பாகிஸ்தானை வெட்கப்படுத்துகிறார். அவர் சில ட்விட்களால் பலன் பெறலாம் ஆனால் பாகிஸ்தான் இன்னும் பலவற்றை இழக்கிறது என கூறி உள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இந்திய குடியரசு தினம்: இலங்கை பிரதமர் ராஜபட்ச வாழ்த்து
செவ்வாய் 26, ஜனவரி 2021 9:59:15 PM (IST)

பொருளாதார சரிவு: மிகப்பெரிய பூங்காவை ரூ.50 ஆயிரம் கோடிக்கு அடகு வைக்கும் இம்ரான்கான்!!
திங்கள் 25, ஜனவரி 2021 4:46:35 PM (IST)

இந்தியா அனுப்பிய 20 லட்சம் கரோனா தடுப்பூசிகள் சென்றடைந்தது: மோடிக்கு பிரேசில் அதிபர் நன்றி
ஞாயிறு 24, ஜனவரி 2021 1:30:46 PM (IST)

ஒட்டுமொத்த உலகுக்கும் கரோனாவை வழங்கிய சீனாவின் உகான் நகரில் இயல்பு நிலை திரும்பியது
ஞாயிறு 24, ஜனவரி 2021 1:27:27 PM (IST)

பிரிட்டனில் உருமாற்றம் அடைந்த கரோனா வைரசால் இறப்பு விகிதம் அதிகரிப்பு : போரிஸ் ஜான்சன்
சனி 23, ஜனவரி 2021 11:38:06 AM (IST)

டிரம்பின் கொள்கைகளுக்கு எதிராக 15 ஆணைகள்: பதவியேற்ற முதல் நாளிலேயே பைடன் அதிரடி!
வியாழன் 21, ஜனவரி 2021 12:01:10 PM (IST)
