» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ஜிம்பாப்வே முன்னாள் அதிபர் ராபர்ட் முகபே மறைவு

வெள்ளி 6, செப்டம்பர் 2019 3:42:42 PM (IST)

ஜிம்பாப்வே முன்னாள் அதிபர் ராபர்ட் முகபே உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். 

ஜிம்பாப்வே நாட்டின் முன்னாள் அதிபர் ராபர்ட் முகபே(95). இவர்   1980 முதல் 1987 வரை ஜிம்பாப்வே பிரதமராகவும் இருந்துள்ளார். மேலும் அந்நாட்டின் குடியரசுத் தலைவர், அதிபர் உள்ளிட்ட பதவிகளையும் வகித்துள்ளார். வயது மூப்பு காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு ராபர்ட் முகபே சிங்கப்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சிகிச்சைப் பலனின்றி அவரது உயிர் பிரிந்தது.  இத்தகவலை ஜிம்பாப்வேயின் தற்போதைய அதிபர் எம்மர்சன் தனது டிவிட்டரில் வெளியிட்டுள்ளார். அத்துடன் மறைந்த முன்னாள் அதிபர் ராபர்ட் முகபேவுக்கு அவர் இரங்கலும் தெரிவித்துள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory