» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ஒரே நேரத்தில் கர்ப்பமான 9 நர்சுகளுக்கு குழந்தை பிறந்தது: அமெரிக்காவில் ருசிகரம்

செவ்வாய் 20, ஆகஸ்ட் 2019 10:59:32 AM (IST)



அமெரிக்காவில் ஒரே நேரத்தில் கர்ப்பமான 9 நர்சுகளுக்கு குழந்தை பிறந்தது.  9 நர்சுகளுக்கு தங்களது குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைராலாகி வருகிறது. 

அமெரிக்காவின் ஓரிகன் மாகாணத்தில் உள்ள போர்ட்லாண்ட் நகரில் மைன் மெடிக்கல் சென்டர் என்ற பெயரில் தனியார் மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு வேலை பார்த்து வரும் நர்சுகள் 9 பேர் ஒரே நேரத்தில் கர்ப்பமாயினர். இதையடுத்து கர்ப்பிணி நர்சுகள் 9 பேரும் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டு "எங்கள் மருத்துவ மையத்தின் 9 நர்சுகள் ஒரே நேரத்தில் கர்ப்பமாகி இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் குழந்தைகளை ஏப்ரல் மற்றும் ஜூலையில் எதிர்பார்த்துள்ளனர். அவர்களுக்கு வாழ்த்துகள்” என்று தெரிவித்தது.

இந்த புகைப்படம் அப்போது சமூக வலைத் தளத்தில் பெரும் கவனத்தை ஈர்த்தது. சமூக வலைத்தள ஆர்வலர்கள் நர்சுகளுக்கு வாழ்த்துக்கூறி அந்த புகைப்படத்தை பகிர்ந்தனர். இந்த நிலையில் அந்த நர்சுகள் 9 பேருக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு குழந்தை பிறந்தது. நர்சுகள் 9 பேரும் தங்களது குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படத்தை மருத்துவமனை நிர்வாகம் தற்போது வெளியிட்டுள்ளது. சமூக வலைத்தளங்களில் வைராலாகி வரும் அந்த புகைப்படம் அதிக லைக்குகளை குவித்து வருகிறது.


மக்கள் கருத்து

சாமிAug 20, 2019 - 06:53:45 PM | Posted IP 108.1*****

டாக்டர்ர்ர்ர்ர்ர்....

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory