» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ஆப்கானில் திருமணவிழாவில் தற்கொலைப் படை தாக்குதல் : உயிரிழப்பு 63 ஆக அதிகரிப்பு

ஞாயிறு 18, ஆகஸ்ட் 2019 10:00:27 PM (IST)



ஆப்கானிஸ்தானின் காபுலில் திருமண விருந்தில் தற்கொலைப் படையினர் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 63 ஆக அதிகரித்துள்ளது.

ஆப்கானிஸ்தான் நாட்டு தலைநகர் காபுல் நகரில் திருமண நிகழ்ச்சி ஒன்று நேற்றிரவு நடந்தது. இதில் சுமார் 1,000க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் கலந்துகொண்டனர். விருந்தின்போது இசைக் கச்சேரி நடத்தப்பட்டது. கலைஞர்கள் இசைத்துக் கொண்டிருந்தபோது, மேடையருகே வெடிகுண்டு ஒன்று திடீரென வெடித்துச் சிதறியது. 

இந்த வெடிகுண்டு தாக்குதலில் விருந்தில் பங்கேற்ற இளைஞர்கள், குழந்தைகள் என சுமார் 40-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் என்றும், பலர் காயமடைந்து உள்ளனர் எனவும் முதல் கட்டமாக தகவல் வெளியானது. இந்நிலையில், வெடிகுண்டு தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 63 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 180க்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory