» செய்திகள் - விளையாட்டு » உலகம்

சீனாவில் சூறைக்காற்றுடன் கனமழை, வெள்ளம்: 5 லட்சம் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

சனி 8, ஜூன் 2019 5:52:44 PM (IST)சீனாவின் கிழக்கு பகுதியில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் வீடுகள், சாலைகள் சேதம் அடைந்துள்ளனர். 5 லட்சம் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

சீனாவின் கிழக்கு பகுதியில் உள்ள ஜியாங்சி மாகாணத்தில் கடந்த வியாழக்கிழமையில் இருந்து சூறைக்காற்றுடன் பரவலான கனமழை பெய்து வருகிறது. வரும் செவ்வாய்க்கிழமை வரை மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில், கடந்த இருநாட்களாக பெய்த தொடர் மழையின் காரணமாக அம்மாகாணத்துக்கு உட்பட்ட பல இடங்கள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன. சுமார் 40 ஆயிரம் ஹெக்டேர் நிலபரப்பில் இருந்த பயிர்கள் எல்லாம் வெள்ளத்தில் மூழ்கி நாசமடைந்தன.ஜியாங்சி மாகாணத்துக்கு உட்பட்ட 23 மாவட்டங்களை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. 

வெள்ளத்தினால் 58 வீடுகள் இடிந்து விழுந்தன. சுமார் 100 வீடுகள் பலத்த சேதம் அடைந்துள்ளன. பல மாவட்டங்களை இணைக்கும் பிரதான சாலைகளை வெள்ளநீர் அரித்துச் சென்றதால் வாகன போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான இடங்களில் மின்சார வினியோகம் துண்டிக்கப்பட்டதால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மழை, வெள்ளத்தால் ஏற்பட்ட நேரடி பொருளாதார இழப்பு சுமார் 10 கோடி அமெரிக்க டாலர்களாக மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், கடைகள் மற்றும் வர்த்தக வளாகங்கள் திறக்கப்படாததால் போதிய உணவுப் பொருட்கள் கிடைக்காமல் சுமார் 5 லட்சத்து 14 ஆயிரம் பேரின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory