» செய்திகள் - விளையாட்டு » உலகம்

வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் முதல் வெளிநாட்டு பயணமாக பூடான் சென்றார்

சனி 8, ஜூன் 2019 5:31:13 PM (IST)

முதல் வெளிநாட்டு பயணமாக வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பூடான் நாட்டுக்கு சென்றார்.

பிரதமர் மோடியின் புதிய அமைச்சரவையில் வெளியுறவு அமைச்சராக நியமிக்கப்பட்டவர் ஜெய்சங்கர். இவர் தனது பொறுப்புகளை ஏற்றபின் முதல் வெளிநாட்டு பயணமாக நேற்று பூடானுக்கு சென்றார். இந்தியாவின் வடக்கில் இருக்கும் அண்டை நாடான பூடானுடன் உறவை மேம்படுத்தும் வகையில் ஜெய்சங்கர் இந்த பயணத்தை மேற்கொண்டிருப்பதாக வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.

இந்த 2 நாள் பயணத்தில் பூடான் மன்னர் ஜிக்மே கேசர் மற்றும் பிரதமர் லேடே ஷெரிங் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தும் ஜெய்சங்கர், இரு நாட்டு உறவுகளை மேம்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து அப்போது விவாதிக்கிறார். பிரதமர் மோடி கடந்த 2014–ம் ஆண்டு பதவியேற்றபின் முதல் வெளிநாட்டு பயணமாக பூடானுக்குத்தான் சென்று வந்தது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory