» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் சீன அதிபரை சந்திக்கிறார் பிரதமர் மோடி

வெள்ளி 7, ஜூன் 2019 11:28:52 AM (IST)

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்துகொள்ள இருக்கும் பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங்கை சந்தித்துப் பேச இருப்பதாக சீனாவுக்கான இந்தியத் தூதர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார்.

சீனாவில் நேற்றுநடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற விக்ரம் மிஸ்ரி செய்தியாளர்களிடம் கூறியதாவது: சீனாவின் வூஹான் நகரில் பிரதமர் நரேந்திர மோடிக்கும், அதிபர் ஷி ஜின்பிங்குக்கும் இடையே கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற அதிகாரப்பூர்வமற்ற பேச்சுவார்த்தை வெற்றிகரமாக அமைந்தது. 

இந்தப் பேச்சுவார்த்தைக்குப் பின்னர், பிரதமர் மோடியும் அதிபர் ஷி ஜின்பிங்கும் பல்வேறு கூட்டங்களின் நடுவே கடந்த ஆண்டில் மட்டும் 4 முறை சந்தித்துப் பேசியுள்ளனர்.இந்நிலையில், கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கெக்கில் அடுத்த வாரம் நடைபெற உள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டின்போது, பிரதமர் மோடியும் அதிபர் ஷி ஜின்பிங்கும் சந்தித்துப் பேச உள்ளனர். இருநாடுகளுக்கு இடையேயான நல்லுறவில் வர்த்தகம் முக்கியப் பங்கை வகித்து வருகிறது  என்று மிஸ்ரி தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory