» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை முறை தொடர்ந்து இலவசமாகவே இருக்கும்: நிர்மலா சீதாராமன்
செவ்வாய் 11, ஆகஸ்ட் 2026 3:26:12 PM (IST)

டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை முறை தொடர்ந்து இலவசமாகவே இருக்கும் என்றும், யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு எந்தக் கட்டணமும் அல்லது வரியும் விதிக்கப்படாது என்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெளிவுபடுத்தியுள்ளார்.
நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் வரிவிதிப்பு மற்றும் இதர சட்டங்கள் (திருத்த) மசோதா நிறைவேறியது. மக்களவையில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா, மாநிலங்களவையிலும் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
இம்மசோதா குறித்துப் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இச்சட்டம் புதிதாக எந்த வரியையோ அல்லது பரிவர்த்தனைக் கட்டணத்தையோ முன்மொழியவில்லை என்று தெரிவித்தார். யுபிஐ தொடங்கப்பட்டதிலிருந்தே பொதுமக்களுக்கு இலவசமாகவே வழங்கப்பட்டு வருவதாகவும், இந்தியர்கள் அனைவரும் எந்தவித கட்டணமுமின்றி இந்தச் சேவையைத் தொடர்ந்து பயன்படுத்தலாம் என்றும் அவர் உறுதியளித்தார்.
வரிவிதிப்பு மற்றும் இதர சட்டங்கள் (திருத்த) மசோதா 2026, பணம் செலுத்துதல் மற்றும் தீர்வுமுறைகள் சட்டம் 2007, வருமான வரிச் சட்டம் 2025, நிதிச் சட்டம் 2026 ஆகிய மூன்று முக்கிய சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்கிறது. பணம் செலுத்துதல் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டதால், யுபிஐ பரிவர்த்தனைகளுக்குக் கட்டணம் வசூலிக்கப்படுமோ என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் எழுந்தது.
எதிர்காலத்தில் யுபிஐ பரிவர்த்தனைகளுக்குக் கட்டணம் விதிக்கும் நடைமுறை கொண்டுவரப்பட்டாலும், அந்தச் சுமை பொதுமக்கள் மீது விழாது என்றும், அது பெரிய வணிகர்களிடம் மட்டுமே வசூலிக்கப்படும் என்றும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை செய்வதற்கு முன் 2 முறை சரிபார்க்கவும்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு
சனி 29, ஆகஸ்ட் 2026 5:29:42 PM (IST)

அன்பையும், நல்லிணக்கத்தையும் வலுப்படுத்தும் ரக்ஷா பந்தன் : பிரதமர் மோடி வாழ்த்து
வெள்ளி 28, ஆகஸ்ட் 2026 11:38:17 AM (IST)

பான் மசாலா விளம்பர விவகாரம்: ஷாருக் கான் உள்பட 3 பாலிவுட் நடிகர்களுக்கு எஃப்டிஏ கெடு!
வியாழன் 27, ஆகஸ்ட் 2026 5:18:56 PM (IST)

ஆந்திராவில் கோர விபத்து: ஆட்டோ மீது பஸ் மோதி 7 பேர் பலி; 4 குழந்தைகள் உள்பட 8பேர் படுகாயம்!
வியாழன் 27, ஆகஸ்ட் 2026 5:05:07 PM (IST)

கேரளாவின் பெயர் அதிகாரப்பூர்வமாக மாற்றம்: உள்துறை அமைச்சகம் அரசாணை வெளியீடு!
புதன் 26, ஆகஸ்ட் 2026 4:01:24 PM (IST)

இந்தியாவின் சிறந்த முதலமைச்சர்கள் பட்டியலில் மு.க.ஸ்டாலின் - சி.ஜே.பி. தலைவர் பேட்டி!
புதன் 26, ஆகஸ்ட் 2026 3:28:06 PM (IST)


