» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்க எதிர்ப்பு: கர்நாடகாவில் தொடர் போராட்டங்கள்!
புதன் 29, ஜூலை 2026 5:01:11 PM (IST)
தமிழகத்திற்குத் தினமும் 3,500 கனஅடி வீதம் காவிரி நீரைத் திறந்து விடுமாறு காவிரி நீர் ஒழுங்குமுறைக்குழு உத்தரவிட்டுள்ள நிலையில், "ஒரு சொட்டுத் தண்ணீர் கூட வழங்கக் கூடாது" என வலியுறுத்திக் கர்நாடகாவில் கன்னட அமைப்புகளும், விவசாயச் சங்கங்களும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன.
தமிழகத்திற்கு இன்று முதல் அடுத்த 15 நாட்களுக்குத் தினமும் 3,500 கனஅடி காவிரி நீரைத் திறந்து விட வேண்டும் எனக் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு உத்தரவிட்டுள்ளது. இந்நடவடிக்கைக்குக் கர்நாடக மாநிலத்தில் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. இவ்வுத்தரவை எதிர்த்துக் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திடம் மேல்முறையீடு செய்யப்படும் எனக் கர்நாடக நீர்ப்பாசனத் துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி தெரிவித்துள்ளார்.
பெங்களூருவில் கன்னட அமைப்பினர் சட்டை அணியாமலும், கைகளில் காலி குடங்களை ஏந்தியபடியும் அரைநிர்வாணப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்திற்குத் தண்ணீர் திறக்கக் கூடாது என முழக்கமிட்ட அவர்களைக் காவல்துறையினர் உடனடியாகக் கைது செய்தனர்.
மைசூரில் விவசாய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் சாலையில் படுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது. அங்கிருந்த போராட்டக்காரர்களையும் காவல்துறையினர் கைது செய்து அப்புறப்படுத்தினர். மண்டியா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் கர்நாடக எல்லைப் பகுதிகளில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை செய்வதற்கு முன் 2 முறை சரிபார்க்கவும்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு
சனி 29, ஆகஸ்ட் 2026 5:29:42 PM (IST)

அன்பையும், நல்லிணக்கத்தையும் வலுப்படுத்தும் ரக்ஷா பந்தன் : பிரதமர் மோடி வாழ்த்து
வெள்ளி 28, ஆகஸ்ட் 2026 11:38:17 AM (IST)

பான் மசாலா விளம்பர விவகாரம்: ஷாருக் கான் உள்பட 3 பாலிவுட் நடிகர்களுக்கு எஃப்டிஏ கெடு!
வியாழன் 27, ஆகஸ்ட் 2026 5:18:56 PM (IST)

ஆந்திராவில் கோர விபத்து: ஆட்டோ மீது பஸ் மோதி 7 பேர் பலி; 4 குழந்தைகள் உள்பட 8பேர் படுகாயம்!
வியாழன் 27, ஆகஸ்ட் 2026 5:05:07 PM (IST)

கேரளாவின் பெயர் அதிகாரப்பூர்வமாக மாற்றம்: உள்துறை அமைச்சகம் அரசாணை வெளியீடு!
புதன் 26, ஆகஸ்ட் 2026 4:01:24 PM (IST)

இந்தியாவின் சிறந்த முதலமைச்சர்கள் பட்டியலில் மு.க.ஸ்டாலின் - சி.ஜே.பி. தலைவர் பேட்டி!
புதன் 26, ஆகஸ்ட் 2026 3:28:06 PM (IST)


