» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
இந்தியாவில் புழக்கத்திற்கு வருகிறது பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்: காகித நோட்டுகள் செல்லுமா?
செவ்வாய் 28, ஜூலை 2026 5:43:22 PM (IST)

இந்தியாவில் சோதனை முறையில் 10 ரூபாய் மற்றும் 20 ரூபாய் மதிப்புடைய பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளைப் புழக்கத்தில் விடுவதற்கு இந்திய ரிசர்வ் வங்கியின் பரிந்துரையை ஏற்று மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
இந்தியாவில் ரூபாய் நோட்டுகள் அறிமுகமான காலம் தொட்டுத் தாள்களால் ஆன காகித நோட்டுகளையே பயன்பாட்டில் வைத்துள்ளோம். இந்நிலையில், நாட்டின் பணப்புழக்க வரலாற்றில் முதல்முறையாகப் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் பயன்பாட்டிற்கு வரவுள்ளன.
முதற்கட்டமாக, சோதனை அடிப்படையில் 10 ரூபாய் மற்றும் 20 ரூபாய் மதிப்பிலான பிளாஸ்டிக் நோட்டுகளை தலா 100 கோடி எண்ணிக்கையில் அச்சிட்டு வெளியிட இந்திய ரிசர்வ் வங்கி (RBI) உரிய ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.
காகித நோட்டுகளுடன் ஒப்பிடுகையில் பிளாஸ்டிக் நோட்டுகள் எளிதில் சேதமடையாது என்பதோடு, அதிக காலம் உழைக்கக்கூடியவை. இதன் மூலம் அடிக்கடி பழைய அல்லது சேதமடைந்த நோட்டுகளை மாற்றி புதிய நோட்டுகளை அச்சிடும் செலவு மற்றும் சிரமங்கள் கணிசமாகக் குறையும் என ரிசர்வ் வங்கி தெரிவித்து உள்ளது.
பிளாஸ்டிக் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டாலும், தற்போது புழக்கத்தில் உள்ள காகித நோட்டுகள் திரும்பப் பெறப்படாது என்றும், பிளாஸ்டிக் மற்றும் காகித நோட்டுகள் ஆகிய இரண்டுமே தொடர்ந்து புழக்கத்தில் இருக்கும் என்றும் மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது.
காகித நோட்டுகளை முழுமையாகப் பிளாஸ்டிக் நோட்டுகளாக மாற்றுவதற்கான திட்டம் எதுவும் தற்போது இல்லை என்றும், முதற்கட்டச் சோதனை முயற்சியின் வெற்றிக்குப் பிறகே கூடுதல் பிளாஸ்டிக் நோட்டுகளைப் புழக்கத்தில் விடுவது குறித்து அடுத்தகட்ட முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை செய்வதற்கு முன் 2 முறை சரிபார்க்கவும்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு
சனி 29, ஆகஸ்ட் 2026 5:29:42 PM (IST)

அன்பையும், நல்லிணக்கத்தையும் வலுப்படுத்தும் ரக்ஷா பந்தன் : பிரதமர் மோடி வாழ்த்து
வெள்ளி 28, ஆகஸ்ட் 2026 11:38:17 AM (IST)

பான் மசாலா விளம்பர விவகாரம்: ஷாருக் கான் உள்பட 3 பாலிவுட் நடிகர்களுக்கு எஃப்டிஏ கெடு!
வியாழன் 27, ஆகஸ்ட் 2026 5:18:56 PM (IST)

ஆந்திராவில் கோர விபத்து: ஆட்டோ மீது பஸ் மோதி 7 பேர் பலி; 4 குழந்தைகள் உள்பட 8பேர் படுகாயம்!
வியாழன் 27, ஆகஸ்ட் 2026 5:05:07 PM (IST)

கேரளாவின் பெயர் அதிகாரப்பூர்வமாக மாற்றம்: உள்துறை அமைச்சகம் அரசாணை வெளியீடு!
புதன் 26, ஆகஸ்ட் 2026 4:01:24 PM (IST)

இந்தியாவின் சிறந்த முதலமைச்சர்கள் பட்டியலில் மு.க.ஸ்டாலின் - சி.ஜே.பி. தலைவர் பேட்டி!
புதன் 26, ஆகஸ்ட் 2026 3:28:06 PM (IST)


