» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
ராமர் கோயிலில் ரூ.7 கோடி கையாடல் வழக்கு : அவசர விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் மறுப்பு!
திங்கள் 29, ஜூன் 2026 3:53:46 PM (IST)

அயோத்தி ராமர் கோயிலுக்கு வழங்கப்பட்ட காணிக்கை நிதியில் முறைகேடு நடந்ததாகக் கூறப்படும் விவகாரம் குறித்து சிபிஐ விசாரணை கோரும் மனுக்களை அவசரமாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
வழக்கின் அவசரத் தன்மை குறித்து நீதிமன்றப் பதிவகம் மற்றும் உரிய அதிகாரி ஆகியோர் திருப்தி அடைந்த பிறகு, உரிய நேரத்தில் இந்த மனுக்கள் விசாரணைக்குப் பட்டியலிடப்படலாம் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ் மற்றும் ஷீல் நாகு அடங்கிய அமர்வு தெரிவித்துள்ளது.
மனுதாரர்களில் ஒருவரான அஜய் குமார் ராய் நேரில் ஆஜராகி, தற்போதைய விசாரணையில் திருப்தியில்லை எனக் கூறி விரைவான விசாரணைக்கு வலியுறுத்தினார். இந்த விவகாரத்தில் உத்தரப் பிரதேச மாநிலத்தின் சார்பில் மூத்த கூடுதல் தலைமை வழக்கறிஞர் சரண் தேவ் சிங் தாக்கூர் ஆஜரானார்.
உத்தரப் பிரதேசத்திலுள்ள அயோத்தி ராமர் கோயில் அறக்கட்டளைக்குப் பக்தர்கள் அளித்த காணிக்கையில் 7 கோடி ரூபாய்க்கும் அதிகமான பணத்தை அங்கு பணிபுரிந்த ஊழியர்கள் கையாடல் செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த விவகாரத்தைத் தொடர்ந்து, குற்றத்திற்குத் தார்மீகப் பொறுப்பேற்று அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராய் மற்றும் அறங்காவலர் அனில் மிஸ்ரா ஆகியோர் தங்களது பதவிகளை அண்மையில் ராஜிநாமா செய்தனர். இப்புகார் தொடர்பாகக் கோயிலில் பணம் எண்ணும் பணியில் ஈடுபட்ட ஊழியர்கள் உட்பட 8 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுத் தற்பொழுது விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ராஜஸ்தானில் அதிர்ச்சி: கடத்தப்பட்ட 13 வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை!
திங்கள் 29, ஜூன் 2026 11:51:00 AM (IST)

ஹைதராபாத் சாலைக்கு 'டொனால்டு டிரம்ப்' பெயர்: தெலுங்கானா அரசுக்கு அமெரிக்க அதிபர் நன்றி!
சனி 27, ஜூன் 2026 11:14:48 AM (IST)

ராமர் கோவில் காணிக்கை மோசடி குற்றவாளிகள் தப்ப முடியாது: யோகி ஆதித்யநாத் எச்சரிக்கை!
வெள்ளி 26, ஜூன் 2026 4:45:23 PM (IST)

இந்தியாவின் புதிய தங்கச் சுரங்கம்: ஆந்திராவில் 0.8 டன் தங்கம் உற்பத்தி செய்ய இலக்கு!
வெள்ளி 26, ஜூன் 2026 11:24:32 AM (IST)

இந்தியாவில் ரூ.4.1 லட்சம் கோடி முதலீடு: பிரதமர் மோடியுடன் அமேசான் சிஇஓ ஆலோசனை!
வியாழன் 25, ஜூன் 2026 5:43:27 PM (IST)

மதுவில் எலி மருந்து கொடுத்து 8 பேரைத் தீர்த்துக்கட்டிய சைக்கோ கொலைகாரன் - பகீர் தகவல்கள்!
வியாழன் 25, ஜூன் 2026 12:26:11 PM (IST)


