» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றுவதை யாராலும் தடுக்க முடியாது: தர்மேந்திர பிரதான்

புதன் 31, டிசம்பர் 2025 12:11:35 PM (IST)



திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றுவதை யாராலும் தடுக்க முடியாது என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறினார்.

காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியின் நிறைவு விழா ராமேசுவரத்தில் நேற்று நடந்தது. சிறப்பு விருந்தினராக துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் பங்கேற்றார். இதில் கவர்னர் ஆர்.என்.ரவி, மத்திய அமைச்சர்கள் தர்மேந்திர பிரதான், எல்.முருகன், பா.ஜனதா மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், தர்மர் எம்.பி., த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., சென்னை ஐ.ஐ.டி. இயக்குனர் காமகோடி உள்பட பலரும் கலந்துகொண்டனர்.

பின்னர் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று சாமி தரிசனம் செய்தார். அதன்பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது: திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத்தூணியில் விளக்கேற்றுவதை யாராலும் தடுக்க முடியாது. மலை மீது தீபமேற்றுவதை தடுக்க நினைப்பவர்களை சிவன் பார்த்துக் கொள்வார். இந்த விவகாரத்தை அரசியல் ரீதியாக தமிழக அரசு கையாள்வது கண்டிக்கத்தக்கது. திருக்குறளை சமூகத்திலிருந்து எப்படி பிரிக்க முடியாதோ அதுபோலதான் திருப்பரங்குன்றமும் என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory