» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

நூறுநாள் வேலை திட்டத்தின் பெயரை மாற்ற எதிர்ப்பு: மக்களவையில் திமுக நோட்டீஸ்

செவ்வாய் 16, டிசம்பர் 2025 11:11:15 AM (IST)

ஊரக வேலை திட்டத்தில் மகாத்மா காந்தி பெயரை நீக்குவதற்கு எதிராக மக்களவையில் திமுக நோட்டீஸ் அளித்துள்ளது.

கிராமப்புறங்களில் உள்ள தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு 100 நாள் வேலை வழங்கும் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை, பெயர் மாற்றி ஆண்டுக்கு 125 நாட்கள் வேலை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இந்த திட்டத்தின் பெயர் "விக்சித் பாரத் - ரோஜ்கர் மற்றும் அஜீவிகா மிஷன் (கிராமின்”) என்பதாகும். இந்த புதிய மசோதா, பழைய வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை ரத்துசெய்யவும் பரிந்துரைக்கிறது. இந்த புதிய மசோதா ஒவ்வொரு நிதியாண்டிலும் 125 நாட்கள் ஊதிய வேலைவாய்ப்புக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் அளிப்பதன் மூலம், விக்சித் பாரத் 2047 என்ற தேசிய தொலைநோக்குப் பார்வைக்கு இணக்கமான ஒரு கிராமப்புற மேம்பாட்டு கட்டமைப்பை நிறுவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இது பற்றிய சுற்றறிக்கை எம்.பி.க்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது. இந்த புதிய மசோதாவுக்கு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்த நிலையில், ஊரக வேலை திட்டத்தில் மகாத்மா காந்தி பெயரை நீக்குவதற்கு எதிராக மக்களவையில் திமுக நோட்டீஸ் அளித்துள்ளது. மற்ற அலுவல்களை ஒத்திவைத்து விட்டு விபி-ஜி ராம் ஜி' என்ற பெயர் சர்ச்சை பற்றி விவாதிக்க கோரி ஒத்திவைப்பு நோட்டிசை திமுக எம்பி டி.ஆர் பாலு அளித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory