» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை : இந்திய ரிசர்வ் வங்கி அறிவிப்பு!
வெள்ளி 6, டிசம்பர் 2024 11:14:49 AM (IST)
வங்கிகளுக்கான குறுகிய காலக் கடனுக்கான வட்டி விகிதத்தில் (ரெப்போ ரேட்) மாற்றமில்லை என இந்திய ரிசர்வ் வங்கி (ஆா்பிஐ) தெரிவித்துள்ளது.
ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமின்றி 6.5 சதவிகிதமாகத் தொடரும் என ஆர்பிஐ ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். இதனால் வீட்டுக் கடன், வாகனக் கடன் உள்ளிட்ட கடன்கள் மீதான வட்டி விகிதத்திலும் மாற்றம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.பொருளாதார வளர்ச்சி விகிதம் சிறப்பாக உள்ளதாகவும் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். நடப்பு நிதியாண்டில் மொத்த உள்நாட்டு வளர்ச்சி(ஜிடிபி) 6.6 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. ஜிடிபி முந்தைய கணிப்பு 7.2 சதவீதமாக இருந்தது. 2020 பிப்ரவரி மாதம் முதல் 11-வது முறையாக ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அந்தமான் –நிக்கோபார் தீவுகளில் 4.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்: ஆய்வு மையம் தகவல் தேசிய
திங்கள் 2, பிப்ரவரி 2026 11:21:43 AM (IST)

ஈரானுக்குப் பதில் வெனிசுவேலாவிடமிருந்து இந்தியா எண்ணெய் இறக்குமதி செய்யும் : டிரம்ப்
திங்கள் 2, பிப்ரவரி 2026 10:34:10 AM (IST)

வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டோரின் வங்கிக் கடன்கள் தள்ளுபடி: பினராயி விஜயன் உத்தரவு!!
திங்கள் 2, பிப்ரவரி 2026 10:30:49 AM (IST)

தனிநபர் வருமான வரி வரம்புகளில் மாற்றமில்லை: மத்திய பட்ஜெட் 2026-27 முக்கிய அம்சங்கள்
ஞாயிறு 1, பிப்ரவரி 2026 2:34:53 PM (IST)

மகாராஷ்டிரா துணை முதல்வராக அஜித் பவார் மனைவி சுனேத்ரா பவார் பதவியேற்பு!
சனி 31, ஜனவரி 2026 5:32:04 PM (IST)

ரூ.40 ஆயிரம் கோடி வங்கி மோசடி வழக்கில் ரிலையன்ஸ் நிறுவன முன்னாள் தலைவர் கைது
சனி 31, ஜனவரி 2026 5:04:51 PM (IST)

