» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

திருப்பதி லட்டு விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும்: ‍ ரோஜா

செவ்வாய் 1, அக்டோபர் 2024 12:05:19 PM (IST)

திருப்பதி லட்டு விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று ஆந்திர மாநில முன்னாள் அமைச்சர் ரோஜா வலியுறுத்தியுள்ளார். 

இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், "இந்துக்களை ஜெகன் மோகன் ரெட்டியிடம் இருந்து பிரிக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, திருப்பதி லட்டுவை கூட உபயோகித்துக்கொண்டார். சுப்ரீம் கோர்ட்டு விசாரணையில் இந்த விவகாரத்தில் உண்மை வெளிவரும்.

இந்த விவகாரத்தை விசாரிக்க சந்திரபாபு நாயுடு அமைத்த சிறப்புக்குழு மீது யாருக்கும் நம்பிக்கை இல்லை. சி.பி.ஐ. விசாரணை நடத்த சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட வேண்டும் என்பதே எனது கோரிக்கை. அதன்மூலம் உண்மை வெளிவர வேண்டும். புனிதத்தன்மையோடுதான் திருப்பதி லட்டு இருக்கிறது என்பதை பக்தர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். பக்தர்களின் பக்தி பூர்வமான உணர்ச்சிகளோடு விளையாடியவர்களுக்கு தண்டனை கிடைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory