» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

இந்தியா - வங்கதேசம் வணிக ஒப்பந்தம்: பிரதமர் மோடியுடன் ஷேக் ஹசீனா சந்திப்பு!

சனி 22, ஜூன் 2024 5:06:45 PM (IST)விரிவான வணிக ஒப்பந்தம் மற்றும் ஒருங்கிணைந்த பொருளாதார கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த இந்தியா - வங்கதேசம் இடையே ஒப்புதல் ஏற்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி - இந்தியா வந்துள்ள வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா ஆகியோருக்கு இடையே இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது இந்த ஒப்புதல் ஏற்பட்டுள்ளது. இரு தலைவர்களும் கூட்டாக இன்று செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய பிரதமர் நரேந்திர மோடி, வங்கதேசம், இந்தியாவின் மிகப்பெரிய மேம்பாட்டுக் கூட்டாளி, எனவே, வங்கதேசத்துடனான உறவுக்கு நாடு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கும் என்று தெரிவித்தார்.மிகச் சிறப்பான எதிர்காலத்துக்காக, இந்தியா - வங்கதேசம் இடையேயான கூட்டுறவில், புதிய விஷயங்களை சேர்க்கவும் திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன என்றார். 

செய்தியாளர் சந்திப்பின்போது ஷேக் ஹசீனா பேசுகையில், இந்தியா எப்போதுமே வங்கதேசத்தின் மிக நெருக்கமான உண்மைக்குரிய நட்பு நாடு. வங்கதேசம், இந்தியாவுடனான நட்புறவுக்கு எப்போதும் அதிக மதிப்பளிக்கும் என்றும் குறிப்பிட்டார்.

இரு நாடுகளுக்கும் இடையே ரயில் போக்குவரத்து, கடல்போக்குவரத்து மேம்பாடு, டிஜிட்டல் டொமைன் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருநாட்டுத் தலைவர்கள் முன்னிலையில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இரு நாட்டுத் தலைவர்களின் பேச்சவார்த்தைக்குப் பின், இந்தியா - வங்கதேசம் இடையே பசுமை கூட்டாண்மைக்கான பகிரப்பட்ட கருத்துருக்களில் கையெழுத்திடப்பட்டது.

மேலும், இந்தியா - வங்கதேசம் இடையே ஒருங்கிணைந்த பொருளாதார கூட்டண்மை ஒப்பந்தம் ஏற்படுத்துவது தொடர்பான பேச்சுவார்த்தையை மேற்கொள்ள ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. இந்தோ - பசிபிக் பெருங்கடல் முன்முயற்சியில் வங்கதேசம் இணைவது என்ற முடிவுக்கு இந்தியா வரவேற்பு தெரிவிப்பதாகவும் பிரதமர் மோடி கூறியுள்ளார். இந்தியா, எப்போதும், அண்டை நாடுகளுடனான நட்புறவுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது என்றும் மோடி கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory