» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கர்நாடகாவில் வாழும் அனைவரும் கன்னடம் கற்க வேண்டும் : சித்தராமையா உத்தரவு

சனி 22, ஜூன் 2024 11:05:30 AM (IST)

கர்நாடகாவில் வாழும் அனைவரும் கட்டாயம் கன்னட மொழியை கற்க‌ வேண்டும் என்று முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

கர்நாடக சட்டப்பேரவை வளாகத்தில் கன்னட தாய் புவனேஸ்வரியின் வெண்கலச் சிலை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா கர்நாடக முதல்வர் சித்தராமையா தலைமையில் நேற்று நடைபெற்றது. இவ்விழாவில் கர்நாடக முதல்வர் சித்தராமையா பேசுகையில், "அகன்ற கர்நாடகாவில் வாழும் மக்கள் எந்தமொழியை பேசினாலும் அவர்கள் கன்னடர்கள்தான்.

இங்கு வாழும் அனைவரும் கட்டாயம் கன்னட மொழியை கற்க‌ வேண்டும். கன்னடர்கள் பிற‌ மொழியினருக்கு கன்னடத்தை கற்றுக்கொடுக்க வேண்டும். கன்னடர்களும் கன்னட மொழியை செம்மையாக கற்க வேண்டும். அப்போதுதான் மற்றவர்கள் கற்பார்கள்’’ என்று வலியுறுத்தினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory