» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ஊழல் வழக்கில் லாலு பிரசாத் யாதவை கைது செய்ய வாரண்ட் பிறப்பிப்பு

சனி 6, ஏப்ரல் 2024 3:38:21 PM (IST)

ஊழல் வழக்கில் விசாரணைக்கு ஆஜராகத லாலு பிரசாத் யாதவை கைது செய்ய குவாலியர் சிறப்பு நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்துள்ளது.  

கடந்த 1995 முதல் 1997-ம் ஆண்டு வரையிலான காலத்தில் போலி ஆவணங்கள் மூலம் சட்ட விரோதமாக ஆயுதங்கள் மற்றும் வெடி பொருட்கள் வாங்கியது தொடர்பாக பீகார் முன்னாள் முதல்-அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்ட 23 பேர் மீது மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் உள்ள காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இது தொடர்பான வழக்கு குவாலியர் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு விசாரணைக்கு லாலு தரப்பில் யாரும் ஆஜராகவில்லை. இதனால் அவருக்கு எதிராக நிரந்தர கைது வாரண்டை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. 

ஒருவருக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டால் அவரை கைது செய்யும் போது நீதிமன்றத்தில் கண்டிப்பாக ஆஜர்படுத்த வேண்டும் என்று அரசு தரப்பு சிறப்பு வக்கீல் அபிஷேக் தெரிவித்தார். முன்னதாக பீகாரில் கால்நடை தீவன ஊழல் வழக்கில் கைதாகி, சிறையில் அடைக்கப்பட்ட லாலு பிரசாத் யாதவ், கடந்த 2021ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஜாமீனில் விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory