» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மத்திய அமைச்சர் அமித்ஷாவின் தமிழக சுற்றுப்பயணம் மீண்டும் ரத்து

வியாழன் 4, ஏப்ரல் 2024 5:46:48 PM (IST)

தவிர்க்க முடியாத காரணங்களால் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் தமிழக சுற்றுப்பயணம் மீண்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வருகிற 19-ந் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. இந்த தேர்தல், தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா, நாம் தமிழர் கட்சி என 4 முனை போட்டி உள்ளது.இதில் தேசிய கட்சியான பா.ஜனதா கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி ஏற்கனவே 3 முறை தமிழகத்திற்கு வந்து பிரசாரம் மேற்கொண்டார்.அவரை தொடர்ந்து மத்திய உள்துறை மந்திரியும், மூத்த தலைவருமான அமித்ஷா இன்று பிரசாரத்துக்காக மதுரை வர இருந்ததாக அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில், திடீரென தனது பயணத்தை அமித்ஷா ரத்து செய்தார்.

இதற்கிடையே அமித்ஷா வருகையில் சிறிது மாற்றங்கள் செய்யப்பட்டு, இன்று இரவு அமித் ஷா மதுரை வருவதாகவும், நாளை தென்காசி, கன்னியாகுமரி செல்ல உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில் , அமித்ஷாவின் தமிழக வருகை மீண்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது.தவிர்க்க முடியாத காரணங்களால் அமித்ஷாவின் தமிழக சுற்றுப்பயணம் மீண்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory